Monday, May 25
Shadow

சூர்யாவால் தடைபடும் படப்பிடிப்பு – படக்குழு புதிய யோசனை

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தஞ்சாவூர் பகுதிகளில் நடந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு தஞ்சாவூர் மற்றும் தென் தமிழகத்தில் நடத்தப்பட உள்ளதாம். அதற்கான படப்பிடிப்பு லொகேஷன்களை படக்குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர்.

அதிலும் ஆறு மற்றும் வயல்வெளி சூழந்த பகுதியில் படப்படிப்பை நடத்த செல்வராகவன் விருப்பம் தெரிவித்துள்னளாராம். ஆனால் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால், அங்கு மக்கள் கூட்டம் கூடி படப்பிடிப்பு தடைபட வாய்ப்பு இருப்பதால், செட் போட்டு படப்பிடிப்பு நடத்தலாம் என்று யோசனையில் படக்குழுனர் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.

அதற்காக நெல்லை அருகில் இருக்கும் அம்பாசமுத்திரம் போன்று செட் ஒன்றும் போடப்பட்டு வருகிறதாம். அதற்காக கலை இயக்குநர் விஜய் முருகன் தலைமையில் அல்லும் பகலுமாக செட் அமைக்கும் பணி நடந்து வருகிறதாம்.

எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.