Saturday, September 5
Shadow

“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; எங்களையும் வாழ விடுங்கள்!” ‘ஆல் பாஸ்’ இசை வெளியீட்டு விழாவில் மன்சூர் அலிகான் காட்டம்!

“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; எங்களையும் வாழ விடுங்கள்!”

‘ஆல் பாஸ்’ இசை வெளியீட்டு விழாவில் மன்சூர் அலிகான் காட்டம் – வடசென்னையின் இயல்பான வாழ்வியலைப் பேசும் படத்திற்கு திரையுலகினர் பாராட்டு

வடசென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அவர்களின் உறவுகளையும், இயல்பான சந்தோஷங்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மென்ட் சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ள இப்படத்தை மைதீன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜனனி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

வடசென்னை என்றாலே வன்முறை, அடிதடி, ரவுடியிசம் போன்ற பிம்பங்களே திரையில் அதிகம் காட்டப்பட்டு வரும் நிலையில், அந்தப் பகுதி மக்களின் எளிமையான அன்றாட வாழ்க்கையை மையமாக வைத்து ‘ஆல் பாஸ்’ உருவாகியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

“உதவி இயக்குநர்களுக்கும் அடையாளம் கிடைக்க வேண்டும்” – இயக்குநர் மைதீன்

விழாவில் பேசிய இயக்குநர் மைதீன், தனது படத்தை உருவாக்குவதில் மூத்த கலைஞர்கள் அளித்த ஆதரவை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

உதவி இயக்குநர்களின் உழைப்பு சினிமாவில் போதிய அளவில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்றும், அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால்தான் தனித்த அடையாளத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடிகர் ஜெயப்பிரகாஷிடம் கதையைச் சொன்னபோது, கதாபாத்திரம் அவருக்கு பிடித்ததால் சம்பளம் குறித்து பெரிதாக யோசிக்காமல் நடிக்க முன்வந்ததாகவும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் கதையை கேட்டவுடன் படத்தின் மீது நம்பிக்கை வைத்து இசையமைக்க ஒப்புக்கொண்டதாகவும் மைதீன் தெரிவித்தார்.

“எங்களைப் போன்றவர்களின் தேடலை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. இப்படம் உருவாக பல நல்ல உள்ளங்களின் உதவியும் ஒத்துழைப்பும் காரணமாக அமைந்துள்ளது” என்று அவர் கூறினார்.

“வடசென்னையை வித்தியாசமான கோணத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்” – ஆர்.வி. உதயகுமார்

படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சிறப்பாக இருப்பதாக பாராட்டிய இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், படத்தின் தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்பையும் குறிப்பிட்டார்.

நாயகன் துஷ்யந்த், நடிகர் ஜெயப்பிரகாஷின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, படத்தில் ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பதாக அவர் பாராட்டினார். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பாடல்களும் படத்திற்கு கூடுதல் பலமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ‘ஆல் பாஸ்’ வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்தார்.

“30 வருட நட்பு… ஜெயப்பிரகாஷின் மகன் என்பதால் இந்தப் படத்தைப் பார்க்க வந்தேன்” – விக்ரமன்

இயக்குநர் விக்ரமன் பேசும்போது, நடிகர் ஜெயப்பிரகாஷுடனான தனது நீண்டகால நட்பை நினைவுகூர்ந்தார்.

சுமார் 30 ஆண்டுகளாக ஜெயப்பிரகாஷுடன் தனக்கு நட்பு இருப்பதாகக் கூறிய விக்ரமன், அவரை நடிகராக இருந்து தயாரிப்பாளராக மாற்றியதில் தனக்கும் ஒரு பங்கு இருப்பதாகத் தெரிவித்தார்.

‘ஆல் பாஸ்’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் தனக்கு பிடித்திருப்பதாகக் கூறிய அவர், படக்குழுவினர் அனைவருக்கும் வெற்றி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; எங்களையும் வாழ விடுங்கள்!” – மன்சூர் அலிகான்

விழாவின் முக்கிய கவனத்தை ஈர்த்தது நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுதான்.

‘ஆல் பாஸ்’ படத்தைப் பாராட்டிப் பேசிய அவர், சினிமாவில் பணியாற்றும் ஒவ்வொரு கலைஞருக்கும் உரிய மரியாதையும் வெளிச்சமும் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“ஒரு திரைப்படத்தில் பணியாற்றும் கலைஞர்களை விளம்பரங்களில் தெரிவது போல முன்னிலைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் முக்கியமானது. அவர்களுடைய பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, சமீபத்தில் தான் நடித்த ‘கருப்பு’ திரைப்படம் தொடர்பான தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.

“நான் ‘கருப்பு’ படத்தின் கிளைமாக்ஸில் டான்ஸ் ஆடினேன். ஆனால் அதை அப்படியே தூக்கிவிட்டார்கள். யூடியூப்பில் வெளியிடுவோம் என்று சொன்னார்கள்; அதையும் செய்யவில்லை. இது என்ன அநியாயம்?” என்று கேள்வி எழுப்பிய மன்சூர் அலிகான்,

“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள். நான் பல வருடங்களாக நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். எனக்கான நியாயம் கிடைக்க வேண்டும்” என்று காட்டமாகக் கூறினார்.

மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் கலைஞர்களைப் பற்றி ஆதாரமற்ற வகையில் பேசப்படுவதாகவும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

“நான் நல்ல வேலை செய்ததாக நினைத்தாலும், அதை கீழே போய் கொச்சைப்படுத்திப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பவர்களும் இருக்கிறார்கள். சினிமாவில் உழைக்கும் ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

தனது பேச்சின் இறுதியில், ‘ஆல் பாஸ்’ படத்திற்கு விளம்பரம் செய்து வரும் ஊடகங்கள் மற்றும் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞருக்கும் நன்றி தெரிவித்த மன்சூர் அலிகான், படத்தின் வெற்றிக்காக வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

“வடசென்னை என்றாலே ஆக்ரோஷம் என்ற பிம்பத்தை மாற்றும் படம்” – தனஞ்செயன்

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, ‘ஆல் பாஸ்’ படக்குழுவினரிடையே நல்ல ஒருங்கிணைப்பும் உற்சாகமும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

வடசென்னை மக்களைப் பற்றிய பொதுவான சினிமா பிம்பத்தை இப்படம் மாற்றும் வகையில் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார்.

“வடசென்னை என்றாலே ஆக்ரோஷம், அடிதடி போன்ற ஒரு பிம்பம் தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அங்கு மிகவும் இயல்பாகவும் எளிமையாகவும் வாழும் மக்கள் அதிகம். அந்த வாழ்வியலை இப்படம் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது” என்றார்.

குறுகலான தெருக்கள், போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட சவாலான இடங்களில் சுமார் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருப்பதையும் அவர் பாராட்டினார்.

“கதை சொன்ன விதமே என்னை கவர்ந்தது” – ஜனனி

நடிகை ஜனனி, இயக்குநர் மைதீன் முதன்முதலில் கதையைச் சொன்னபோதே அது தனக்கு பிடித்துவிட்டதாகத் தெரிவித்தார்.

கதையின் பின்னணி மற்றும் படப்பிடிப்பு நடைபெறவிருந்த இடங்கள் குறித்த இயக்குநரின் அணுகுமுறை தன்னை கவர்ந்ததாகவும், படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

‘ஆல் பாஸ்’ படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனனி, ரசிகர்கள் அனைவரும் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“இந்த கதாபாத்திரத்தை நான்தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்” – ஜெயப்பிரகாஷ்

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசும்போது, இயக்குநர் மைதீன் முழுக் கதையையும் விவரமாகச் சொன்னதாகவும், அதில் தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடிக்க முடிவு செய்ததாகவும் கூறினார்.

“நடிக்கத்தானே வந்திருக்கிறோம்… கண்டிப்பாக செய்கிறேன்” என்று இயக்குநரிடம் தெரிவித்ததாகக் கூறிய அவர், படம் முழுவதும் வடசென்னையின் வாழ்வியலை விட்டு விலகாமல் இயல்பாக உருவாக்கப்பட்டிருப்பதாக பாராட்டினார்.

ஒரு சமையல்காரர், ஒரு பெயிண்டர், ஒரு சைக்கிள் கடைக்காரர் என மூன்று கதாபாத்திரங்களை மையமாக வைத்து அவர்களது குடும்ப வாழ்க்கை, குழந்தைகள், சந்தோஷம், சண்டை உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகளை இப்படம் பதிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

“இந்தப் படத்தைப் பார்க்கும்போது மன அமைதி கிடைக்கும்” – ஜேம்ஸ் வசந்தன்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களையும் பாராட்டினார்.

பல திரைப்படங்களில் அதிகப்படியான வன்முறை இடம்பெறுவதைப் பார்க்கும்போது தனக்கு சில நேரங்களில் கேள்வி எழும் என்றும், ஆனால் ‘ஆல் பாஸ்’ படத்தைப் பார்க்கும்போது அத்தகைய உணர்வு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்தப் படத்தைப் பார்க்கும்போது மன அமைதி கிடைக்கும். இயக்குநர் வடசென்னையை இதுவரை யாரும் காட்டாத ஒரு கோணத்தில் பதிவு செய்திருக்கிறார்” என்றார்.

படத்தின் கலை இயக்குநரின் உழைப்பையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். பாடலாசிரியர் மோகன் ராஜனின் வளர்ச்சியைப் பார்ப்பதில் மகிழ்ச்சி என்றும், இப்படத்தில் அவர் நான்கு பாடல்களை எழுதியிருப்பதாகவும் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்.

“இந்தப் படம் எனது நான்காவது படம்” – துஷ்யந்த்

நடிகர் துஷ்யந்த், தனக்கு நேர்மறையான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் மைதீன் மற்றும் தயாரிப்பாளர் மோகனா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

தனது திரைப்பயணத்தில் ‘ஆல் பாஸ்’ கதாபாத்திரம் மறக்க முடியாததாக இருக்கும் என்றும், தனது தந்தை ஜெயப்பிரகாஷுடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

தனது முதல் படமான ‘ஈசன்’ திரைப்படத்தில் சிறு வயதில் நடித்த அனுபவத்தை நினைவுகூர்ந்த துஷ்யந்த், 2008 முதல் 2026 வரை தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை முன்னிறுத்தும் படம்

‘ஆல் பாஸ்’ படத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா. ஆர், சத்யா, சஞ்சய், கோகுல், நிகில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘பாண்டியநாடு’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட படங்களில் நடித்த சரத் லோகித்ஷவா இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘பாபநாசம்’ படத்தில் நடித்த ரோஷன் பஷீர், ‘பைசன்’ படத்தில் பி.டி. வாத்தியாராக நடித்த அருவி மதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

இயக்குநர் மூர்த்தி, கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தில்ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சுப்ரமணியபுரம்’ புகழ் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல்களை எழுதியுள்ளார்.

‘பசங்க’ படத்தின் படத்தொகுப்பாளர் எஸ். பாஸ்கர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜெயசீலன். டி கலை இயக்குநராகவும், ஐ. ராதிகா நடன இயக்குநராகவும், மெட்ரோ மகேஷ் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

வடசென்னையின் மறுபக்கத்தைச் சொல்லும் ‘ஆல் பாஸ்’

பொதுவாக வடசென்னை என்றாலே வன்முறையும் ரவுடியிசமும் நிறைந்த பகுதி என்ற சினிமா பிம்பமே உருவாக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு வாழும் சாதாரண மக்களின் குடும்பம், வேலை, உறவுகள், கனவுகள், பிரச்சினைகள் என அவர்களின் அன்றாட வாழ்க்கையை இயல்பாகப் பதிவு செய்வதே ‘ஆல் பாஸ்’ படத்தின் முக்கிய அம்சமாகத் தெரிகிறது.

இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினரின் பேச்சுகளிலும் இதே கருத்து தொடர்ந்து வெளிப்பட்டது.

ஒருபுறம் வடசென்னையின் வாழ்வியலை புதிய கோணத்தில் பதிவு செய்யும் முயற்சி; மறுபுறம் சினிமாவில் உழைக்கும் ஒவ்வொரு கலைஞருக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் என, ‘ஆல் பாஸ்’ விழா வழக்கமான திரைப்பட விழாவைத் தாண்டி பல்வேறு விவாதங்களுக்கும் இடமளித்தது.

குறிப்பாக, “பெரிய நடிகர்கள் வாழட்டும்; எங்களையும் வாழ விடுங்கள்” என்ற மன்சூர் அலிகானின் வார்த்தைகள் விழாவின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளன.

வடசென்னையின் இயல்பான மனிதர்களையும் அவர்களது வாழ்வியலையும் மையமாகக் கொண்டிருக்கும் ‘ஆல் பாஸ்’, திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

“Suriya and Karthi Are Big Stars… Let Them Flourish, But Let Us Live Too!”

Mansoor Ali Khan voices concerns over opportunities and recognition for artistes at the ‘All Pass’ audio and trailer launch

The audio and trailer launch event of ‘All Pass’, directed by Maideen and centred on the everyday lives and realities of North Chennai, was held in Chennai with the presence of several leading personalities from the Tamil film industry.

Produced by Mohana R. under the banner One Step Entertainment, the film has been written and directed by Maideen. Dushyanth, known for his roles in Nirangal Moondru and Tharunam, plays the lead, while Bigg Boss-fame Janani plays the female lead.

The film attempts to present a different side of North Chennai, moving beyond the familiar cinematic portrayal of the region as a backdrop for violence and gangsterism. Instead, it focuses on ordinary people, their families, relationships, aspirations and everyday struggles.

Maideen: “Assistant directors also need opportunities and recognition”

Speaking at the event, director Maideen thanked the senior artistes and technicians who supported his debut venture.

He highlighted the struggles faced by assistant directors in the film industry and said that their contribution often goes unnoticed.

“Assistant directors have their own struggles, but their identity in cinema is often not recognised. They can establish themselves only when they receive opportunities,” Maideen said.

He also recalled how actor Jayaprakash readily agreed to play an important role after hearing the complete story. He expressed his gratitude to music composer James Vasanthan as well for trusting the script and coming on board.

Maideen said that the film became possible because of the support and encouragement extended by several experienced personalities in the industry.

R.V. Udhayakumar praises the trailer and songs

Director R.V. Udhayakumar appreciated the trailer and songs of All Pass and praised the work of the film’s technical crew.

He also complimented Dushyanth for living the character rather than merely performing it, while praising Janani and the film’s music.

He wished the entire team a grand success.

Vikraman recalls his long association with Jayaprakash

Director Vikraman spoke about his nearly three-decade association with actor Jayaprakash.

Recalling their professional journey, Vikraman said that he had known Jayaprakash for around 30 years and had been closely associated with his transition from acting to film production.

After watching the trailer and listening to the songs of All Pass, Vikraman praised the team and wished the film success.

“Suriya and Karthi are big stars… let them live, but let us live too!” – Mansoor Ali Khan

Actor Mansoor Ali Khan’s speech became one of the major highlights of the event.

While praising All Pass, he stressed the importance of recognising every artiste and technician who contributes to a film.

“Every artiste and technician who works on a film deserves to be given due recognition. Their work should be promoted and acknowledged,” he said.

Mansoor Ali Khan also expressed his disappointment over the removal of a dance sequence he had performed for the recently released film Karuppu.

“I danced in the climax of Karuppu, but the sequence was completely removed. I was told that it would be released on YouTube, but that did not happen either. What kind of injustice is this?” he questioned.

He then made a strong appeal for greater opportunities and recognition for artistes who have been part of the industry for several years.

“Suriya and Karthi are big stars. Let them flourish. But let us live too. I have been an actor and producer for many years. I deserve justice as well,” Mansoor Ali Khan said.

He also voiced his displeasure over what he described as derogatory and unfounded comments made about artistes through social media and other platforms.

According to him, the contribution of every individual working in cinema should be respected, irrespective of their position or popularity.

He concluded by thanking the media and everyone involved in promoting All Pass, while wishing the film success.

Dhananjayan: “The film presents a different side of North Chennai”

Producer Dhananjayan praised the overall energy and coordination within the All Pass team.

He pointed out that Tamil cinema has often portrayed North Chennai primarily through violence and aggression, whereas the region is also home to a large number of people leading simple and ordinary lives.

“North Chennai has often been given an image of aggression and violence in Tamil cinema. But in reality, many people there lead very simple and ordinary lives. It is appreciable that this film attempts to capture that lifestyle,” he said.

He also highlighted the challenges of shooting the film for nearly 45 days in narrow streets and congested locations.

Dhananjayan congratulated producer Mohana R. for taking her first step as a producer and wished the entire team success.

Janani: “The story immediately impressed me”

Actress Janani said that she was impressed with the story when director Maideen narrated it to her for the first time.

She particularly liked the backdrop of the story and the director’s approach towards the locations where the film was shot.

Janani said that working with the entire cast and crew had been a memorable experience and added that she was eagerly looking forward to the film’s release.

She appealed to audiences to support All Pass.

 

Jayaprakash: “I decided that I had to play this character”

Actor Jayaprakash revealed that he chose his character after hearing the complete narration from director Maideen.

He said that the character immediately appealed to him and that he decided he should be the one to portray it.

According to Jayaprakash, the film remains faithful to the lifestyle it seeks to portray, from its dialogues and houses to its characters and situations.

The story revolves around three ordinary men — a cook, a painter and a bicycle shop owner — and explores their families, children, relationships, happiness and conflicts.

He praised the director for portraying North Chennai without resorting to exaggerated stereotypes.

James Vasanthan: “The film gives you a sense of peace”

Music composer James Vasanthan praised the performances and technical work in All Pass.

He said that while some films leave him wondering about the excessive violence portrayed on screen, All Pass creates an entirely different feeling.

“When you watch this film, you will not have such questions. Instead, you will get a sense of peace,” he said.

James Vasanthan also praised the art department and lyricist Mohan Rajan, who has penned four songs for the film.

He added that director Maideen has presented North Chennai from a perspective that has rarely been explored on screen.

Dushyanth: “This character will remain special in my journey”

Actor Dushyanth thanked director Maideen and producer Mohana for giving him the opportunity to play the lead role.

He said the character would remain an unforgettable part of his acting journey.

Dushyanth also spoke fondly about working alongside his father, actor Jayaprakash, in the film.

He recalled his early days in cinema and his experience of working in Easan as a child. He thanked everyone who had supported his journey from 2008 to 2026.

A strong technical team

The film features Jayaprakash, Senthilkumari, director Subramania Siva, Vinodhini, Prasanna Balachandran, Mohana R., Sathya, Sanjay, Gokul, Nikhil and others in important roles.

Sarath Lohitashwa, known for films such as Pandianadu and Ethir Neechal, plays the antagonist. Roshan Basheer of Papanasam fame and Aruvi Madan, who played the PT teacher in Bison, are also part of the cast.

Directors Moorthy and Kalaiarasan Kannusamy appear in comic roles.

Dhilraju, who has worked on films including Kalaga Thalaivan, Annadurai and Thagararu, is the cinematographer.

James Vasanthan has composed the music, while Mohan Rajan has penned the lyrics.

S. Baskar, known for his editing work in Pasanga, handles the editing. Jayaseelan D. is the art director, I. Radhika is the choreographer and Metro Mahesh has handled the stunt choreography.

‘All Pass’ promises a different look at North Chennai

With its attempt to move away from conventional stereotypes and portray the everyday lives of ordinary people in North Chennai, ‘All Pass’ has already generated attention following the release of its trailer and songs.

The audio and trailer launch also highlighted the film’s emphasis on the contribution of technicians and artistes, along with the importance of presenting a more realistic representation of North Chennai.

At the same time, Mansoor Ali Khan’s emotional appeal — “Let the big stars flourish, but let us live too” — emerged as one of the most talked-about moments of the event.

With its grounded setting, ensemble cast and focus on everyday human relationships, All Pass is now gearing up to meet audiences with a story that promises to showcase a different face of North Chennai.