Saturday, February 15
Shadow

ரசிகர்கள் முன்பு சிங்கமாகிய சூர்யா

நடிகர் சூர்யா, பொது இடங்களில் அமைதியான அணுகுமுறையை கடைப்பிடிப்பவர். அதுபோல், தன்னுடைய ரசிகர்கள் மீது பேரன்பு கொண்டவர். பொது விழாக்களில் ரசிகர்களை பற்றி பேசாமல் இருக்க மாட்டார். சமீபத்தில் தன்னுடைய காலில் விழுந்த ரசிகரிடம், மீண்டும் அவர் காலில் விழுந்தார். யார் காலிலும் விழக்கூடாது என்பதற்காக சூர்யா அவ்வாறு செய்தார்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சிக்காக ஆந்திரா சென்றிருந்த சூர்யா, அங்குள்ள ரசிகர்களிடம் கடுமையாக நடந்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சியைத் முடித்து விட்டு சூர்யா காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அப்போது, பைக்கில் வந்த ரசிகர்கள் அதி வேகத்தில் அவரை பின் தொடர்ந்திருக்கிறார்கள். இதனையறிந்த சூர்யா, காரை நடுரோட்டில் நிறுத்தி அவர்களை கண்டித்துள்ளார். பைக்கை வேகமாக ஓட்டாதீர்கள் என்று அவர்களை திட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply