ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற ‘பலூன்’ படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக கலகலப்பு-2 படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், ஜெய் தற்போது வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கத்தில் ‘ஜருகண்டி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி ஆகியோர் தயாரித்து வருகிறார்கள்.
‘ஜருகண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சில தினங்களுக்கு முன்பு பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரிலீஸ் செய்தார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட இருக்கிறார். வருகிற பிப்ரவரி 5-ம் தேதி மாலை 6 மணிக்கு டீசரை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் நடிக்கின்றார். ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில், போபோ சஷியின் இசையில், பிரவீன் கே.எல். படத்தொகுப்பில், ரேமியன் கலை இயக்கத்தில், டான் அசோக்கின் ஸ்டண்ட் இயக்கத்தில் ‘ஜருகண்டி’ உருவாகிறது.