
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், விக்னேஷ் சிவன், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது மேடைக்கு வந்த ரசிகர்களுடன் சூர்யாவும் நடனமாடினார். அப்போது ரசிகர்களில் ஒருவர் சூர்யாவின் காலில் விழுந்திருக்கிறார்.
தன் காலில் விழுந்த ரசிகர்களை தடுத்த சூர்யா, அவரது காலில் விழுந்து இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.
தானா சேர்ந்த கூட்டம் படம் உலகமெங்கும் நாளை ரிலீசாகிறது.