
தீபாவளிக்கு திரையரங்குகளை அதிரவைக்கும் ‘சீன்’ – சூர்யாவின் புதிய அவதாரம் குறித்து படக்குழு உற்சாகம்!
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம், தீபாவளி விருந்தாக நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மலையாளத் திரையுலகில் தனது தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன், நடிகர் சூர்யாவுடன் முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘சீன்’. அதிரடி, நகைச்சுவை, கிரைம் திரில்லர் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த மாஸ் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவில் நடிகர் சிவகுமார், நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
‘சீன்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ளனர். ஜெயஸ்ரீ தாமோதரன் மற்றும் ராஜசேகர் பாண்டியன் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

விழாவில் பேசிய படக்குழுவினர், ‘சீன்’ திரைப்படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத வித்தியாசமான சூர்யாவை காண முடியும் என உற்சாகமாக தெரிவித்தனர். காமெடி, மாஸ், திரில்லர், காதல் என பல்வேறு அம்சங்கள் கலந்த ஒரு முழுமையான திரையரங்க அனுபவமாக இப்படம் உருவாகியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பேசப்பட்டபோது, இளம் தலைமுறையினர் மற்றும் புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் ழகரம் ஸ்டுடியோஸ் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த முயற்சியின் முதல் படைப்பாக ‘சீன்’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் நடித்துள்ள சமூக ஊடகப் பிரபலங்களும், இளம் கலைஞர்களும் தங்களது சினிமா பயணத்தை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சியுடன் பேசினர். சிறிய ஊர்களில் இருந்து கனவுகளுடன் பயணத்தைத் தொடங்கி இன்று சூர்யாவுடன் திரையைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது மறக்க முடியாத தருணம் என அவர்கள் தெரிவித்தனர்.
‘சீன்’ மூலம் தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்
நடிகர் நஸ்லென், ‘சீன்’ தான் தனது முதல் தமிழ் திரைப்படம் என்றும், தமிழ் ரசிகர்கள் தன் மீது காட்டும் அன்பு மிகவும் நெகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதேபோல், இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் தனது முதல் தமிழ் திரைப்படம் இதுவே என்றும், சூர்யாவுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறினார்.
நடிகை நஸ்ரியா நஜீம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்க தனது நீண்ட நாள் கனவு ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
விழாவில் பேசிய நடிகர் ஆனந்தராஜ், இப்படத்தில் சூர்யாவின் தந்தையாக நடித்திருப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறி, இயக்குநர் ஜித்து மாதவனுக்கும் சூர்யாவுக்கும் இந்தப் படம் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இயக்குநர் ஜித்து மாதவன் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பேசுகையில், படத்தைப் பற்றிய பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு பதிலாக, இதுவரை வெளியான டீசர்கள் மற்றும் டிரெய்லரை ரசிகர்கள் பார்த்து, நவம்பர் 6ஆம் தேதி திரையரங்கில் படத்தை நேரடியாகக் கண்டு ரசிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
சூர்யாவின் முந்தைய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, ‘சீன்’ திரைப்படமும் ரசிகர்களுக்கு ஒரு புதிய திரையரங்க அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.
அதிரடி, நகைச்சுவை, கிரைம் திரில்லர் மற்றும் மாஸ் பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களும் கலந்த ‘சீன்’, இந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க தயாராகியுள்ளது.
‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Suriya’s ‘Scene’ Set for a Grand Diwali Release on November 6
Suriya’s much-awaited film ‘Scene’, directed by Jithu Madhavan, is gearing up for a grand worldwide theatrical release on November 6 as a Diwali treat for audiences.
Director Jithu Madhavan, known for his distinctive storytelling, joins hands with Suriya for the highly anticipated entertainer Scene. Promising a perfect blend of action, comedy, crime thriller elements and mass entertainment, the film is expected to offer audiences a refreshing theatrical experience this festive season.
The film stars Nazriya Nazim, Naslen, Anand Raj, Lal and Raj Prasanna, among several other prominent artistes, in important roles. Vineeth Augustine has handled the cinematography, while the music has been composed by Sushin Shyam.
Produced by Suriya and Jyotika under the banners of 2D Entertainment and Azhagaram Studios, the film has Jayasree Damodaran and Rajasekar Pandian serving as co-producers.
The grand audio and trailer launch event of Scene was recently held at a private college campus in Chennai. Veteran actor Sivakumar and actor Karthi attended the event as special guests and extended their wishes to the entire team.
Speaking at the event, members of the film’s team expressed their excitement about the project and revealed that audiences will get to see Suriya in a completely different avatar. The film is said to bring together comedy, mass moments, thrills and entertainment in an exciting new format.
The event also highlighted the vision behind Azhagaram Studios, which has been established with the aim of encouraging young talent and providing opportunities to emerging artistes and technicians. Scene marks the studio’s first production venture.
Several young artistes associated with the film shared their emotional journeys at the event, recalling how their dreams of entering the film industry had eventually led them to share screen space with one of Tamil cinema’s biggest stars, Suriya.
A New Beginning in Tamil Cinema
Actor Naslen expressed his happiness about making his Tamil cinema debut with Scene. He thanked Tamil audiences for the love they have shown him and hoped that the same affection would continue after they watched the film on November 6.
Music composer Sushin Shyam also makes his Tamil film debut with Scene. He described his experience of working with Suriya as unforgettable and expressed confidence that audiences would enjoy the film.
Actress Nazriya Nazim, who is returning to Tamil cinema after a long gap, shared her happiness about being part of the project. She revealed that Scene marks her return to Tamil films after nearly 12 years and described working with Suriya as the fulfilment of a long-standing dream.
Actor Anand Raj, who plays Suriya’s father in the film, expressed his happiness about being part of the project and wished both director Jithu Madhavan and Suriya a hat-trick success with Scene.
Director Jithu Madhavan, speaking in his trademark humorous style, invited audiences to experience the film directly on the big screen. He urged movie lovers to watch Scene in theatres and celebrate Diwali with the entire team.
With action, comedy, crime thriller elements and mass entertainment packed into one exciting package, Scene is all set to offer audiences a complete festive entertainer.
Suriya’s ‘Scene’ will hit theatres worldwide on November 6, making it one of the major Diwali releases of the season.
