Friday, November 6
Shadow

33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரையில் ‘ஜென்டில்மேன்’! டிசம்பர் 11 முதல் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ்

33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரையில் ‘ஜென்டில்மேன்’! டிசம்பர் 11 முதல் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ்

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வெற்றிப் படங்களில் ஒன்றாகவும், 1990-களின் திரையுலகில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிய படமாகவும் கொண்டாடப்படும் ‘ஜென்டில்மேன்’, மீண்டும் ரசிகர்களை பெரிய திரையில் சந்திக்க வருகிறது.

மெகா தயாரிப்பாளர் K.T. குஞ்சுமோனின் பிரம்மாண்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 1993-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜென்டில்மேன்’ திரைப்படம், வரும் டிசம்பர் 11 முதல் உலகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எஸ். ஷங்கர் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘ஜென்டில்மேன்’. வித்தியாசமான திரைக்கதை அமைப்பு, பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் புதுமையான பாடல் உருவாக்கம் ஆகியவற்றின் மூலம் தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ஷங்கர்.

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம், வெளியான காலகட்டத்தில் வசூல் ரீதியாகவும், ரசிகர்களின் வரவேற்பிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதிரடியான சண்டைக் காட்சிகள், காதல், விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இப்படம், சமூகத்தில் நிலவும் முக்கியமான ஒரு பிரச்சினையை தனது கதையின் மையமாகக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தலைமுறை ரசிகர்களுக்கும் இந்தக் கதையின் முக்கியத்துவம் நெருக்கமாக இருக்கும் நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஜென்டில்மேன்’ மீண்டும் திரைக்கு வருவது பழைய ரசிகர்களுக்கு இனிய நினைவுகளையும், இளம் தலைமுறையினருக்கு புதிய திரையரங்க அனுபவத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A.R. ரஹ்மானின் காலத்தால் அழியாத இசை, ஷங்கரின் தனித்துவமான இயக்கம் மற்றும் அர்ஜுனின் சிறப்பான நடிப்பு ஆகியவை ‘ஜென்டில்மேன்’ படத்தின் மிகப்பெரிய பலங்களாக அமைந்தன. குறிப்பாக, பிரபுதேவா மற்றும் கௌதமி நடனமாடிய ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடல், பல தலைமுறைகளை கடந்தும் ரசிகர்களிடையே இன்றளவும் பிரபலமாக இருந்து வருகிறது.

Gentleman Film International நிறுவனம் சார்பில் K.T. குஞ்சுமோன் தயாரித்துள்ள இப்படத்தில், மதுபாலா, வினீத், சுபஸ்ரீ, எம்.என். நம்பியார், சரண் ராஜ், அஜய் ரத்னம், கவுண்டமணி, செந்தில் மற்றும் ராஜன் பி. தேவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலகுமரன் வசனங்களை எழுதியுள்ள இப்படத்திற்கு, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் கவிஞர் வாலி பாடல்களை எழுதியுள்ளனர். கலை இயக்குநராக தோட்டா தரணி, படத்தொகுப்பாளர்களாக வி.டி. விஜயன் மற்றும் பி. லெனின் பணியாற்றியுள்ளனர்.

இப்போது, புதிய தலைமுறை ரசிகர்களின் திரையரங்க அனுபவத்திற்கு ஏற்ப, 4K Ultra HD காட்சித் தரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட 7.1 Surround Sound தொழில்நுட்பத்துடன் ‘ஜென்டில்மேன்’ மீண்டும் வெளியாகிறது. Grace Film Media நிறுவனம் சார்பில் அனில் குமார் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.

டிசம்பர் 11 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் ‘ஜென்டில்மேன்’, 1990-களின் பொற்கால தமிழ் சினிமாவின் பிரம்மாண்டத்தை மீண்டும் பெரிய திரையில் கொண்டாட ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பாக அமைய உள்ளது.

After 33 Years, ‘Gentleman’ Returns to the Big Screen on December 11!

One of the most celebrated and successful films in the history of Tamil cinema, ‘Gentleman’, is all set to make a grand return to theatres after 33 years.

Mega producer K.T. Kunjumon has planned a spectacular re-release of the 1993 blockbuster, which will hit screens worldwide on December 11. A brand-new poster has also been unveiled to officially announce and celebrate the film’s re-release.

Released in 1993, ‘Gentleman’ marked the directorial debut of acclaimed filmmaker S. Shankar. With its innovative screenplay, grand visual presentation and unique approach to songs and storytelling, the film established Shankar as a distinctive new voice in Indian cinema.

Starring Action King Arjun in the lead role, Gentleman emerged as a massive success among audiences and at the box office. Its gripping action sequences, romance and engaging narrative made it a favourite among movie lovers. The film also addressed an important social issue through its central storyline, making its theme relevant even today.

The announcement of Gentleman returning to theatres is expected to excite both longtime fans and a new generation of audiences. The re-release offers movie lovers an opportunity to experience the grandeur of the film on the big screen once again.

The film is also remembered for its timeless music composed by A.R. Rahman, Shankar’s distinctive filmmaking style and Arjun’s memorable performance. The popular song ‘Chikku Bukku Rayile’, featuring Prabhu Deva and Gautami, continues to remain a favourite among audiences across generations.

Produced by K.T. Kunjumon under the banner of Gentleman Film International, the film features an impressive ensemble cast including Madhoo, Vineeth, Subhashri, M.N. Nambiar, Charan Raj, Ajay Ratnam, Goundamani, Senthil and Rajan P. Dev.

The film’s dialogues were written by Balakumaran, while the songs were penned by legendary lyricists Vairamuthu and Vaali. Thotta Tharani served as the art director, with V.T. Vijayan and B. Lenin handling the editing.

For its grand theatrical return, Gentleman has been enhanced with 4K Ultra HD picture quality and upgraded 7.1 Surround Sound technology, offering audiences a refreshed cinematic experience. The film is being distributed by Anil Kumar under the banner of Grace Film Media.

Set for a worldwide theatrical re-release from December 11, Gentleman is ready to bring back the magic and grandeur of 1990s Tamil cinema to the big screen, giving fans another opportunity to celebrate one of Tamil cinema’s most iconic blockbusters.