Saturday, October 12
Shadow

சி3 வசூல் வேட்டை மூலம் ரஜினிக்கு அடுத்து தான்தான் என்பதை நிரூபித்த சூர்யா!

சிங்கம் சீரிஸின் மூன்றாம் பாகம் அண்மையில் சூர்யா – ஹரி கூட்டணி வெளியாகியுள்ளது. முதல் இரு பாகங்களும் வெற்றி படங்கள் என்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. படமும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் இரண்டு நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 45 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இதில் தெலுங்கில் மட்டுமே இப்படம் ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளதாம். இதன்மூலம் ஞானவேல் ராஜா சொன்னதுபோல் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்துவிட்டார் சூர்யா.

ரஜினிக்கு அடுத்து நான் நீ என்று போட்டி போட்டு கொண்டஇருந்த விஜய் அஜித இருவரையும் ஓரம்கட்டி சொன்னதை செய்த சூர்யா என்று தான் சொல்லணும் முதல் இரண்டு நாள் இந்த வசூல் என்றால் இன்றும் நாளையும் மேலும் வசூல் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Reply