
தொடர் சாதனை நாயகன் என்ற பட்டம் விஜயிடம் இருந்து தற்போது சூர்யா தட்டி பறித்துள்ளார் என்று தான் சொல்லணும். இதுக்கு காரணம் சூர்யா மற்றும் அவரது ரசிகர்கள் தான் என்ன சாதனை என்று தான் கேக்குறீங்க
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், டீஸர் என அனைத்துமே அதிரடி சாதனை படைத்து ரசிகர்களையும் கோலிவுட்டையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வந்தது.
இதனையடுத்து தற்போது சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்த செகண்ட் லுக் போஸ்டர் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்டாகி மெர்சல் போஸ்டரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தது.
இதனை அதிகாரபூர்வமாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது, ஆனாலும் இதுவரை தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீஸர் பெற்றுள்ள பார்வையாளர்களை மெர்சல் வெறும் 5 மணி நேரத்திலேயே பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
