Thursday, April 25
Shadow

இணையதளங்களில் வைரலாகும் `தல 57′ புகைப்படங்கள்!

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் படமாக்கப்பட்டு வரும்`தல 57 படத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.`வீரம்’, `வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் `தல 57′ படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். வில்லனாக பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.
ak57-1
அஜித் படங்களிலேயே ரூ.100 கோடியை தாண்டி அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் `தல 57′ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
c13pqrbwqaa9n8k
நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் `தல 57′ படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தற்போது, பல்கேரியாவில் எடுக்கப்பட்டு வரும் சில காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் கசிந்து வைரலாக பரவி வருகிறது.
c13pem6w8aakd-b
ரம்ஜானை முன்னிட்டு ஜுன் 23 அல்லது 24ம் தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ak57-2

Leave a Reply