Wednesday, May 31
Shadow

Tag: அப்பா

பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் இசையமைப்பாளர் அம்ரீஷ்

பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் இசையமைப்பாளர் அம்ரீஷ்

Latest News, Top Highlights
இசையமைப்பாளர் அம்ரீஷ் - கீர்த்தி தம்பதிகளுக்கு நேற்று மதியம் 2.20 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது...இது இந்த தம்பதியின் முதல் குழந்தையாகும். தமிழ் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிவரும் இசையமைப்பாளர் அம்ரீஷ், நடிகை ஜெயசித்ராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அம்ரீஷ், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் தற்போது சார்லி சாப்ளின் 2 படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' பாடல் சமீபத்தில் வெளியானது. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பட்டம் பெற்ற செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி இணைந்து பாடிய இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யூடியூபில் மட்டும் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் இப்பாடலைக் கண்டு களித்திருக்கிறார்கள். தனது இசையில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தின் சின்ன மச்சான் பாடல் சூப்பர் ...