Tuesday, August 9
Shadow

Tag: அம்பரீஷ்

நடிகர் அம்பரீஷ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அம்பரீஷ் கன்னடத் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடகாவின், மண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகாவில் உள்ள தொட்டஅரசினகெரே கிராமத்தில் பிறந்தார். இவர் 1972 முதல் 2012 வரை பல கன்னடத் திரைப்படங்களில் நடித்தார். கர்நாடக அரசின் திரைப்பட விருதும், நந்தி விருதும் பிற சிறப்பு விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை இருநூறைத் தாண்டும். இவர் ரஜினியுடன் பிரியா என்ற தமிழ் படத்தில் நடித்தார். கன்னட நடிகர் அம்பரீஷ் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில் நவம்பர் 24, 2018 அன்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக, பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். இவர் நடித்த படங்கள்:  நாகரஹாவு, பங்காரத கள்ள, சீதையல்ல சாவித்ரி, மகதேஸ்வர பூஜாபல, சுபமங்களா, பாக்கியஜோதி, ஒந்தே ரூப எரடு கு...