Friday, November 6
Shadow

Tag: #உள்ளே வெளியே

சிலுக்கு போன்ற நாயகியை தேடும் முன்னணி இயக்குநர்

சிலுக்கு போன்ற நாயகியை தேடும் முன்னணி இயக்குநர்

Latest News, Top Highlights
கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு பிறகு இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் `உள்ளே வெளியே-2'. கடந்த 1993ம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான `உள்ளே வெளியே' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் அந்த படத்தில் இடம் பெற்ற இரட்டை அர்த்த வசனங்கள் தான். அந்த வகையில், `உள்ளே வெளியே-2' படத்தின் பணிகளில் தற்போது பிசியாகி இருக்கிறார் பார்த்திபன். அந்த படத்திற்கான கலைஞர்கள் வேட்டையில் தீவிரமாக இறங்கியிருக்கும் பார்த்திபன், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை இணைய தளம் மூலம் தேடி வருகிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ‘2018ல் துவங்கும் உள்ளே வெளியே கமர்ஷியல் காமெடி படத்திற்கு, 18 வயதில் அமைதி-வசீகரமான பெண்ணும், 28 வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு போன்ற பெண்ணும், 38 வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவ...
மலேசியாவில் பார்த்திபன் ஆடும் ‘உள்ளே வெளியே’ ஆட்டம்!

மலேசியாவில் பார்த்திபன் ஆடும் ‘உள்ளே வெளியே’ ஆட்டம்!

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் கதைக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்ட நிலைதானோ என்னவோ அனைத்து இயக்குனர்களும் தங்களது வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க களமிறங்கி விட்டார்கள். அந்த வரிசையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தான் இயக்கி, நடித்து, தயாரித்து 1993-ல் வெளியான ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். கடைசியாக ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி, நடக்கவிருக்கும் இந்த படத்திற்கான தயாரிப்பாளர்களை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள பார்த்திபன் அது குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், ‘‘மலேசிய நாட்டிற்கோர் நற்செய்தி! 5,6,7 தேதிகளில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் விழாவுக்கும், என அடுத்த படமான ‘உள்ளே வெளியே-2’ படத்திற்கான தயாரிப்பாளர்களை உறுதி செய்யும் பணிக்காகவும் மலேசியா வருகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்....