Saturday, April 18
Shadow

Tag: எம். எல். வசந்தகுமாரி

பாடகி எம். எல். வசந்தகுமாரி பிறந்த தின பதிவு

பாடகி எம். எல். வசந்தகுமாரி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
எம். எல். வசந்தகுமாரி தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகராக இருந்துள்ளார். மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட எம். எல். வசந்தகுமாரி, குத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும் லலிதாங்கிக்கும் மகளாகப் பிறந்தார். தாய் தந்தை இருவரும் இசைக் கலைஞர் ஆவர். சென்னையில் ஆங்கிலப்பள்ளியில் படித்து மருத்துவத்துறையில் நுழைய இருந்தவர், பிரபல பாடகர் ஜி. என். பாலசுப்பிரமணியம் முயற்சியால் இசைத்துறைக்கு வந்துவிட்டார். இவர் பாடிய பாடல்கள் இடம் பெற்ற படங்கள்: ராஜ முக்தி, கிருஷ்ண பக்தி, நல்லதம்பி, வாழ்க்கை, மந்திரி குமாரி, தாய் உள்ளம், மனிதன், ரத்தக் கண்ணீர், கொங்கு நாட்டுத் தங்கம்...