
ஐரா – திரைவிமர்சனம் (வித்தியாசம்) Rank 3.5/5
நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள "ஐரா"படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது.
மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜூன் கேஎம், கடந்தாண்டு எச்சரிக்கை என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக அறிமுகமானார். தற்போது உணர்ச்சிமிக்க த்ரில்லர் படமான ஐரா படத்தை உருவாகியுள்ளார். படத்தின் கதையை கேட்டவுடன் இப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளார்.
தொடர் வெற்றி நாயகியாக வலம் வரும் நயன்தாராவின் அடுத்த மிக பிரமாண்ட படைப்பு ரசிகர்களிடம் ஒரு மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ள ஒரு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்கும் நயன்தாரா இந்த படத்திலும் அதை தொடர்ந்துள்ளார்.குறிப்பாக பவானி பாத்திரத்தில் மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிருபித்துள்ளார். சரி இந்த படத்தில் நடித்த நடிகர்கள் கதையை பற்றி பார்ப்போம்
இந்த படத்தில் நயன...