Wednesday, February 8
Shadow

Tag: கே.ஜி.எஃப்

கே.ஜி.எஃப் 2 திரை விமர்சனம் (ரேடிங் 4.75/5)

Latest News, Review
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் 2 படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்- யை யஷ் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் தொடர்கிறது. கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் யஷ். கே.ஜி.எஃப்-பை பிடிக்க யஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். அதே சமயம் இறந்துவிட்டதாக கருதப்பட்ட சஞ்சய் தத், கே.ஜி.எஃப்.யை கைப்பற்ற தன் படைகளுடன் வருகிறார். இறுதியில் எதிரிகளை எதிர்த்து யஷ், கே.ஜி.எஃப்யை தக்க வைத்துக் கொண்டாரா? சஞ்சய் தத்தின் நிலைமை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகனாக நடித்து இருக்கும் யஷ் தனி ஒருவனாக படத்...

நாளை வெளியாகிறது கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…..

Latest News, Top Highlights
கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தின் வில்லன் சஞ்சய் தத்தின் போஸ்டர் நாளை வெளியிடப்படவுள்ளது. கன்னட ஹீரோ யஷ் நடித்திருந்த கே. ஜி. எஃப் திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. கன்னடம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் இந்த படம் வெளியாகி பிரமாண்ட வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து கே.ஜி.எஃப் சேப்டர் 2 படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்து வருகிறார். நாளை சஞ்சய் தத் பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்துக் கூறும் விதமாக சஞ்சய் தத் போட்டோவுடன் கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். "The only way is the BRUTAL way!!" என அவர் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்....