Monday, November 30
Shadow

Tag: கொண்டு

திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம் – அமலா பால்

Latest News, Top Highlights
சமீபத்தில் அமலா பால் நடிப்பில் உருவான ஆடை திரைப்படம் வெளியானது. அப்படத்தின் டீசர் வெளியான போதே பலர் அப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், சொல்லப்பட்ட தேதியில் வெளியிடாமல் வேறு தேதியில் அப்படம் வெளியாகி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், மைலாப்பூர் ஐநாக்ஸ் திரையரங்கில் நடைபெற்ற திரைப்பட விழாவில் இயக்குனர் பாரதி ராஜாவும், அமலாபாலும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது பேசிய நடிகை அமலா பால், திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம் என தெரிவித்தார். நாம் பிறக்கும் போது ஆடையுடன் பிறக்கவில்லை என்றும், அதே போல், யாரும் சாதி மதங்களுடன் பிறக்கவில்லை எனவும் அமலாபால் குறிப்பிட்டார்....
கல்லூரி விடுதிகளில் நடக்கும்  சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள “மயூரன்”

கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள “மயூரன்”

Latest News, Top Highlights
PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் "மயூரன்" என்று பெயரிடப்பட்டுள்ளது. மயூரன் என்றால் 'விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன்' என்று பொருள். வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ்), அமுதவாணன் (தாரை தப்பட்டை), அஸ்மிதா (மிஸ் பெமினா வின்னர்) மற்றும் கைலாஷ், சாஷி, பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஒளிப்பதிவை பரமேஷ்வர் செய்துள்ளார். இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர். படத்தின் இசையை பழையவண்ணாரப்பேட்டை படம் மூலம் பிரபலமடைந்த ஜுபின் மற்றும் ஜெரார்ட் இருவரும் செய்துள்ளனர். படத்தின் பாடல்களை குகை மா.புகழேந்தியும், எடிட்டிங் பணி...
CLOSE
CLOSE