ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் பிறந்த தின பதிவு
தாமஸ் குரூஸ் மாபோதர் IV தனது திரைப் பெயரான டாம் குரூஸ் மூலம் நன்கு பிரபலமாகியுள்ளார். இவர் ஒரு அமெரிக்க நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். 2006 ஆம் ஆண்டில் போர்பஸ் பத்திரிக்கையானது அவரை உலகின் மிகுந்த செல்வாக்குள்ள பிரபலங்களில் ஒருவராக வரிசைப்படுத்தியிருந்தது. அவர் அகாடெமி விருதுகளுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் கோல்டன் குளோப் விருதுகளை மூன்று முறை வென்றிருக்கின்றார். நடிகருக்கான "தலைமுறை காவிய எக்ஸ் (Generation X) படமாகவும் வாழ்க்கைப் பணி உருவாக்கிய" படமென்றும் விவரிக்கப்பட்ட, 1983 ஆம் ஆண்டில் வெளிவந்த ரிஸ்கி பிசினஸ் (Risky Business) திரைப்படத்தில் அவரது முதல் முதன்மைக் கதாபாத்திரம் அமைந்தது.[3] 1986 ஆம் ஆண்டில் வெளிவந்து மிகவும் பிரபலமாகி வசூல் ரீதியாக வெற்றியடைந்த டாப் கன் (Top Gun) திரைப்படத்தில் கப்பல் மாலுமி கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்தார். அதன் பின்னர் ...
