தலைவி திரை விமர்சனம் (Rank 3.5/5)
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அரவிந்தசாமி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் இசையில் உருவாக்கியுள தலைவி திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
எம்ஜிஆர் என்னும் மாபெரும் வசீகரமான தலைவர், அவரது கட்சிக்காக உழைக்க முன் வரும் ஜெயலலிதா, ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அவமானங்கள், அரசியலில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் ஆகியவைகளை மிக அழகாக இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்று சொல்ல வேண்டுமானால் சரியான கேரக்டருக்கு சரியான நடிகர்களை தேர்வு செய்து தான். குறிப்பாக ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் எப்படி பொருந்துவார் என்று படம் ஆரம்பிக்கும் போது கேள்வி கேட்டு அனைவரின் வாயை அடைத்து உள்ளார் ஏ.எல்.விஜய். அதேபோல் அச்சு அசலாக எம்ஜிஆர் ஆகவே மாறிவிட்ட அரவிந்தசாமி, சசிகலா கேரக்டருக்கு பூர்ணா, கருணாநிதி கேரக்டருக்க...