ஓ மை டாக் – திரைப்பட விமர்சனம் (ரேட்டிங் 3/5)
தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ள படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ள படம் ஓ மை டாக்.
மூத்த நடிகர் விஜயகுமாருடைய மகன் அருண்விஜய், அவருடைய பேரன் அர்ணவ் விஜய் ஆகிய மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ளனர்.
ஊட்டியில் வசிக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பம் அருண்விஜய்யுடையது. அப்பா விஜயகுமார், மனைவி மகிமா நம்பியார், மகன் அர்ணவ் ஆகியோரைக் கொண்ட சிறிய குடும்பம்.
தங்கள் வசதியை மீறி மகனை உலகத்தரப் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைப்பதால் கடன் சிக்கல்.அதனால் சின்னச் சின்னச் சங்கடங்கள் எனப் போய்க்கொண்டிருக்கும் அந்தக் குடும்பத்துக்குள் ஒரு நாய்க்குட்டி நுழைகிறது. அதன்பின் நிறைய மாற்றங்கள். அவை என்ன? என்பதைச் சுவாரசியமாகச் சொல்லியிருக்கும் படம்தான் ஓ மை டாக்.
விஜயகுமார் பொருத்தமாக நடித்திருக்கிறார் என்பதும் அருண்விஜய் சிறப்பாக நடித்திருக்கிறா...