நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாமே – அஜித்
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாமே, எதற்காக கலைநிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று அஜித் கூறியதாக எஸ் வி சேகர் கூறியுள்ளார்.
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, கடந்த சனிக்கிழமை மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நடைபெற்றது. இந்த விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நடிகர் – நடிகைககள் கலந்து கொண்டனர்.
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக, சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் இரண்டரை கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், லைகா மொபைல் மற்றும் சன் நெட்வொர்க் உள்ளிட்ட சில நிறுவனங்களும் நிதியுதவி அளித்தன.
ஆனால், இந்த விழாவில் மூத்த கலைஞர்கள் அவமதிக்கப்பட்டதாகக் கூறி நடிகர் சங்க டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார் எஸ்.வி.சேகர். இதுகுறித்து தனது ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்கத் தலைவருக்கு அவர் அனுப்பி...
