Friday, March 17
Shadow

Tag: நடிகர்

அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்… -நடிகர் சூர்யா கருத்து

Latest News, Top Highlights
சென்னை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ்(31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளை திறந்ததாகக்கூறி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையை தொடர்ந்து இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு திரையுலகினர், விளையாட்டு பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும். கோவில்பட்டியில் நிகழ்ந்த அத்துமீறல் காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல். இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம் என்று கடந்து செல்ல முடியாது. தங்கள் மரணத்தின் மூலம் தந்தை, மகன் இருவரும் இந்த சமூகத்த...

கொரோனா தடுப்பு நடவடிக்கை; நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி

Latest News, Top Highlights
கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரண நிதி வழங்கும்படி, பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆகியோர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். இதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ், ரூ.3 கோடி வழங்கி உள்ளார். அவர், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், பெப்சி ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், தினக்கூலிகள் மற்றும் அவர் பிறந்த ராயபுரம் பகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்காக ரூ.75 லட்சம் வழங்கியுள்ளார்....

திருநங்கைகளுக்கான இல்லம் கட்டித்தரும் திட்டத்திற்கு நடிகர் அக்சய்குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதி உதவி

Latest News, Top Highlights
நடிகர் ராகவா லாரன்சின் அறக்கட்டளை மூலம், திருநங்கைகளுக்கான இல்லம் கட்டித்தரும் திட்டத்திற்கு நடிகர் அக்சய்குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். தனது அறக்கட்டளை மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்துவரும் நடிகர் ராகவா லாரன்ஸ், அதன் அடுத்தகட்டமாக திருநங்கைகளுக்கான இல்லம் கட்டித்தரும் திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், லாரன்ஸ் இயக்கும், லக்சுமி பாம்ப் எனும் படத்தில் நடித்துவரும் பாலிவுட் நடிகர் அக்சய் குமார், இத்திட்டத்திற்காக ஒன்றரை கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார். தமிழ்ப்படமான காஞ்சனாவின் இந்தி ரீமேக்காக உருவாகிவரும் லக்சுமி பாம் படத்தில் அக் ஷய்குமார் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது....

நடிகர் சத்யராஜ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சத்யராஜ் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் சுப்பையா ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர். இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார். வில்லாதி வில்லன் திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்தார். 1987இல் சத்யராஜூம், அவருடைய மனைவியும், சத்யராஜின் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரைப் பத்திரிகை வைத்து அழைத்தனர். அதன்படி எம்.ஜி.ஆரும் தன் துணைவியாருடனும், அமைச்சர் முத்துசாமியுடனும் சென்றார். அதன்பின் திருமணத்திற்கு வந்தமைக்கு எம்.ஜி.ஆருக்கு நன்றி சொல்ல சென்ற போது எம்.ஜி.ஆ...

நடிகர் தேவ் ஆனந்த் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
தரம் தேவ் கிஷோரிமல் ஆனந்த் ஒரு பிரசித்தி பெற்ற இந்திய பாலிவுட் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். தேவ் தனது மூன்று சகோதரர்களில் இரண்டாவதாக பிறந்தவர். அவரது மூத்த சகோதரர் சேதன் ஆனந்த் ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார், அதேபோல் அவரது இளைய சகோதரர் விஜய் ஆனந்தும் இயக்குனர் ஆவார். அவர்களின் சகோதரி, ஷீல் காந்தா கப்பூர், புகழ் பெற்ற ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படத்துறையின் இயக்குனர் சேகர் கப்பூரின் தாயார் ஆவார். பஞ்சாப் மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முந்தைய குர்தாஸ்பூர் மாவட்டத்தில் செல்வவளம் மிக்க வக்கீல் கிஷோரிமல் ஆனந்த் மகனாக தரம் தேவ் குந்தன் லால் கிஷோரிமல் ஆனந்த் பிறந்தார். லாகூரில்(தற்போது பாகிஸ்தானில்) உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து இளங்கலைப்பட்டம் பெற்றார். நடிப்பின் மேல் அவர் கொண்டிருந்த காதல், சொந்த நகரைத் துறந்து இந்தி திரைப்படத்தொழிலின் மையமான மும்பை நோக்கி வர...

பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் காலமானார்

Latest News, Top Highlights
தெலுங்கு சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ், இவருக்கு வயது 39. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் இன்று மதியம் உயிரிழந்தார். கடந்த மூன்று வருடங்களாக கல்லீரல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 1996-ல் 'சம்பிரதாயம்' என்ற படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை 170 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழிலும் 'என்னவளே', 'காதல் சுகமானது' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2016-ல், 'டாக்டர் பரமானந்தய்யா' ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் வேணு மாதவின் மறைவுக்கு தெலுங்கு ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....

ஹாலிவுட் நடிகர் வில் சுமித் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வில் ஸ்மித் (Will Smith) (பிறப்பு விலர்ட் கிரிஸ்தஃபர் ஸ்மித் ஜூனியர் புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். "உலகில் மிக வன்மையான நடிகர்" என்று அமெரிக்காவின் நியூஸ்வீக் இதழ் குறிப்பிட்ட வில் ஸ்மித் பல கிராமி விருதுகளை வென்றுள்ளார். ஒரு தங்கக் கோள் விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியாவில் பிறந்து வளந்த வில் ஸ்மித் 1980களில் "ஃப்ரெஷ் பிரின்ஸ்" (Fresh Prince) என்ற பெயரில் ராப் பாடல்களை படைத்தார். இவரும் இவரின் நண்பர் டிஜே ஜாசி ஜெஃப்பும் சேர்ந்து ராப் உலகில் புகழுக்கு வந்தனர். 1988இல் இவர் முதலாம் ராப் கிராமி விருதை வென்றுள்ளார். 1990இல் ஃப்ரெஷ் பிரின்ஸ் அஃப் பெல் ஏர் என்ற தொலைக்காட்சித் தொடரில் முதலாக நடித்தார். 1990 முதல் 1996 வரை இக்காட்சி தொடர்ந்தது. இந்த தொடர் முடிந்து விட்டு இவர் தனியாக ராப் இசைத் தொக...

நடிகர் வையாபுரி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வையாபுரி ஒரு நகைச்சுவை நடிகர். தேனி அருகிலுள்ள முத்துத்தேவன்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த இவரது இயற்பெயர் இராமகிருஷ்ணன். இவர் எட்டாம் வகுப்பு வரை முத்துத்தேவன் பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை பழனிசெட்டிபட்டி, பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். அதன் பின்பு தேனியிலுள்ள மருந்துக்கடை ஒன்றில் வேலை பார்த்தார். திரைப்படத்துறையில் ஏற்பட்ட ஆர்வத்தில் சென்னைக்குச் சென்ற இவர் முதலில் திரைப்படத்துறையில் பல வேலைகளைச் செய்தார். சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சின்ன மருது பெரிய மருது”, “மால்குடி டேஸ்” போன்ற தொடர்களில் நடிக்கத் தொடங்கிய இவரை “இளைய ராகம்” எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் விவேக் நடிக்க வைத்தார். அதன் பிறகு “துள்ளாத மனமும் துள்ளும்” படத்தில் திருநங்கை வேடத்தின் மூலம் பெயர் பெற்றார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாள...
காப்பான் முன்னணி நடிகர் ஒருவருக்கான எழுத்தப்பட்ட கதை: நடிகர் சூர்யா

காப்பான் முன்னணி நடிகர் ஒருவருக்கான எழுத்தப்பட்ட கதை: நடிகர் சூர்யா

Latest News, Top Highlights
உண்மையில் காப்பான் படத்தின் கதை முன்னணி நடிகர் ஒருவருக்காக எழுத்தப்பட்ட கதை என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்த படத்தின் கதை 2012ல் முன்னணி நடிகராக இருந்த ஒருவருக்காக எழுதப்படத் கதை, அவரால் நடிக்க முடியாமல் போன காரணத்தால் நிறுத்தி வைகப்பட்டு இருந்ததது. இறுதியான தற்போது கேவி ஆனந்த் அந்த கேரக்டரில் நடிக்க என்னை அணுகினார் என்றார்....

நடிகர் கார்த்திக் பிறந்த தின பதிவு

Top Highlights
கார்த்திக், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார்.2006-ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கியுள்ளார். இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார். அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கௌதம் கார்த்திக் இவரது மூத்த மகனாவார்....