Tuesday, March 18
Shadow

Tag: நடிகை

நடிகை சுலக்சனா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுலக்சனா என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் செப்டம்பர் 1, 1965 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். காவியத் தலைவி திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார். 1980 இல் சுபோதையம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார். இவர் தூறல் நின்னு போச்சு என்னும் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர். இவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ம. சு. விசுவநாதன் மகனான கோபிகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்....

விஷாலின் இரும்புத்திரை-2 படத்தில் நடிக்கும் பிரபல நடிகை

Latest News, Top Highlights
நடிகர் விஷால், நடிக்கும் இருப்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தில், பிரபல நடிகையான ரெஜினா கசாண்ட்ரா-வை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பி. எஸ். மித்ரன் இயக்கத்தில், விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் விஷாலின் நடிப்பு, தயாரிப்பில் வெளியான தமிழ்த்திரைப்படம் இரும்பு திரை. இந்த படத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், ஜார்ஜ் சி. வில்லியம்சின் ஒளிப்பதிவில், ரூபனின் படத்தொகுப்பில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படம் தெலுங்கில் அபிமன்யடு என் பெயரில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இரும்பு திரை படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை படத் தயாரிப்பாளர் எழில் இடம் பணியாற்றிய இயக்குனர் ஆனந்த் இயக்குகிறார். இயக்குனர் பிஎஸ் மித்திரன் இயகத்தில் இரும்...

நடிகை ரிச்சா பலோட் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ரிச்சா பலோட் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு முதலாவதாக லம்மே என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். 2000 ஆம் ஆண்டு நுவ்வே கவாளி என்ற தொலுங்குப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமான பலோட் சாஜாகான் திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார்....

நடிகை ஜமுனா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஜமுனா தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் பதினாறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். 1953ல் புட்டிலு திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். எல். வி. பிரசாதின் மிஸ்ஸம்மா திரைப்படத்தில் நடித்தபிறகு இவர் புகழ்பெற்றார். ஜனா பாய் என்ற இயற்பெயர் கொண்ட ஜமுனா கர்நாடகாவில் உள்ள ஹம்பி எனுமிடத்தில் நிப்பானி ஶ்ரீனிவாசன் ராவ் - கௌசல்யாதேவி ஆகியோருக்குப் பிறந்தார். ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள துக்கரிலா எனுமிடத்தில் வளர்ந்தார். நடிகை சாவித்திரி இவருடைய வீட்டில் தங்கியிருந்தார். அதனால் சாவித்திரி ஜமுனாவை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார். ஜமுனா பள்ளியில் மேடை நடிகராக இருந்துள்ளார். அவருடைய அன்னை ஹார்மோனியம் போன்றவற்றை இசைக்க கற்றுத் தந்தார். டாக்டர் காரிகாபதி ராஜா ராவ் மா பூமி என்ற ஜமுனாவின் நாடகத்தினைப் பார்த்தவர், தன்னுடைய புட்டி...

நடிகை சுமலதா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுமலதா இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் இருநூறிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரைப்படங்கள், மலையாளத் திரைப்படங்கள், கன்னடத் திரைப்படங்கள் மற்றும் இந்தித் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார். இவர் தமிழ்நாட்டின் சென்னையில் 1963ல் பிறந்தவர். மலையாளத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இவர், கன்னடத் திரைப்பட நடிகரான அம்பரீஷை திருமணம் செய்து கொண்டார். தற்போது பெங்களூரில் வசிக்கின்றார். பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன், சுயேட்சை வேட்பாளரான நடிகை சுமலதா, 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மண்டியா மக்களவைத் தொகுதியிலிருந்து வென்றார். இவர் நடித்த தமிழ் படங்கள்: கரையெல்லாம் செண்பகப்பூ, குடும்பம் ஒரு கதம்பம், முரட்டுக் காளை, ஒரு ஓடை நதியாகிறது...

நடிகை மோனிகா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மோனிகா என்பவர் ஒரு இந்தியா நடிகையாவார். இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை தமிழ் மொழிப் படங்களில் துவங்கினார். 1990களில் குழந்தை நட்சத்திரமாகவும், 2000ல் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். அழகி திரைப்படம் மூலமாக புகழ்பெற்ற நடிகையானார். அதையடுத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி மற்றும் சிலந்தி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் தன்னுடைய பெயரை பார்வனா என்று மாற்றம் செய்தார்; ஆனால் 5/30/2014 அன்று இவர் இசுலாம் மதத்துக்கு மாறியுள்ளதால் தன் பெயரை ரகிமா என மாற்றிக் கொண்டார். இவர் நடித்த படங்கள்: அவசரப் போலிஸ் 100, பிரம்மா, என்றும் அன்புடன், பாண்டியன், சக்கரைத் தேவன்,என் ஆசை மச்சான், வரவு எட்டணா செலவு பத்தணா,சதி லீலாவதி, இந்திரா, செல்லக்கண்ணு, ஆசை, மூவேந்தர், லவ் சேனல்,அழகி, காதல் அழிவதில்லை, இனிது இனிது காதல் இனிது, ஜன்னல் ஓரம்...

நடிகை எஸ். வரலட்சுமி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
எஸ். வரலட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை மற்றும் பின்னணிப் பாடகியாவார். அவரது பாடல்கள் மற்றும் வேடங்களுக்காக தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே சமாளி மற்றும் தெலுங்கில் மகாமந்திரி திம்மரசு, வேங்கடேசுவர மகாத்மியம் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன. வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் பிறந்தவர். சிறுவயதிலிலேயே பாலயோகினி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். எஸ். வரலட்சுமி 1938-ம் ஆண்டு கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "சேவாசதனம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் நாகேஸ்வரராவ் உடன் "பால்ராஜ்' படத்தில் அறிமுகமானார். ஏவிஎம்-ன் "ஜீவிதம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனை திருமணம் செய்து கொண்டா...

நடிகை அஞ்சலிதேவி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அஞ்சலிதேவி பழம்பெரும் தெலுங்கு, மற்றும் தமிழ் திரைப்பட நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். லவகுசா திரைப்படத்தில் சீதையாக நடித்துப் புகழ் பெற்றவர். அஞ்சனி குமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பெத்தாபுரம் என்ற ஊரில் நூக்கையா என்பவருக்குப் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலிதேவி நடிப்புத் தொழிலுக்காக சென்னைக்கு 40களில் குடிபெயர்ந்தார். 1936 இல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான அவரை எல். வி பிரசாத் தனது கஷ்டஜீவி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அத்திரைப்படம் முழுமை பெறாமல் பாதியிலேயே நின்று விட்டது. பின்னர் பிரபல இயக்குனர் சி. புல்லையாவின் இயக்கத்தில் வெளியான கொல்லபாமா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். புல்லையாவே அஞ்சனி குமாரி என்ற பெயரை அஞ்சலிதேவி என்ற பெயர...

நடிகை வாணி கபூர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வாணி கபூர்  இந்திய நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். கபூர் 2013 ஆம் ஆண்டில் "பரிணீதி சோப்ரா" மற்றும் "சுசாந்த் சிங் ராஜ்புட்" ஆகியோர் நடித்த காதல் மற்றும் நகைச்சுவை "சுத் தேசி ரொமான்ஸ்" என்றத் திரைப்படத்தில் அறிமுகமானார். அவரது நடிப்புத்திறன் 59 வது ஃபிலிம்ஃபேர் விருதுகளில் சிறந்த அறிமுக பெண் நடிகருக்கான விருதுகள் உட்பட பல விருதுகளையும் பரிந்துரைகளையும் இவருக்கு பெற்றுத் தந்தது, 2014 இல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெளிவந்த காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமான ஆஹா கல்யாணம்", என்ற படத்தில் நடித்தார். இது மிதமான வெற்றியாக நிரூபிக்கப்பட்டது. கபூரின் தந்தை ஒரு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யும் ஒரு தொழிலதிபர் ஆவார், மற்றும் அவரது தாயார் ஆசிரியராகைருந்து பின்னர், விற்பனை நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர் ஆனார். அவர் தில்லியில் அசோக் விஹார் மாதா ஜெய் கவுர் ப...

நடிகை சாய்ரா பானு பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சாய்ரா பானு சாய்ரா பானோ என்றும் அழைக்கப்படுகிறார். இந்திய திரைப்பட நடிகை மற்றும் திரைப்பட நடிகர் திலிப் குமாரின் மனைவி. 1961 முதல் 1988 வரை பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 1982ஆம் ஆண்டு கலாநிதி இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படமான "கடவுளுக்கு ஒரு கடிதம்" திரைப்படத்தில் நடிகர் ராஜிவுக்கு இணையாக கதாநாயகியாக நடித்தார். சாயிரா பானு நடிகை நசீம் பானு அவர்களின் மகளாவார். சாய்ரா தனது குழந்தை பருவத்தில் பெரும் பகுதியை லண்டனில் கழித்தார். 1960 ஆம் ஆண்டில் சைரா பானு, தனது 16வது வயதில் இந்தித் திரைப்படங்களில் அவர் அறிமுகமானார்.[3] 1961 ஆம் ஆண்டில் ஜங்கிளீ என்ற படத்தில் ஷாமி கபூருடன் கதாநாயகியாக அறிமுகமானார், அதில் அவர் சிறந்த நடிகைக்கான முதல் பிலிம்பேர் பரிந்துரைப் பெற்றார். இந்த படத்தின் பிரபலமான பாடல் "யாஹூ! ! சஹாய் கோய் முஜே ஜங்கிள் கே " முகம்மது ரஃபி பாடினார். சாய்ரா பானு 1966 இல் நடிகர் திலீப...