நடிகை சுருதி ராஜ் பிறந்த தின பதிவு
நடிகை சுருதி ராஜ், சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் ஹீரோயின் துளசியை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. இன்றைக்கும் அவர் சன் டிவியில் அபூர்வராகங்களில் பவித்ராவாக வந்து இல்லத்தரசிகளிடம் பேசி விட்டு செல்கிறார்.
அன்னக்கொடியும் 5 பெண்களும் சீரியலில் கவுரியாக மாமியாரை எதிர்க்கும் மருமகளாக நடிக்கிறார். என்னதான் ஹீரோயினாக நடித்தாலும் மூன்றாம் பிறை ஸ்ரீதேவி போல பைத்தியமாக நடிக்க வேண்டும் என்பது ஸ்ருதியின் கனவாம்.
சன் டிவியில் அபூர்வ ராகங்கள் , ஜீ தமிழ் டி.வியில் 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி ராஜ்.
மாண்புமிகு மாணவன், காதல் டாட்காம், ஜெர்ரி போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
மலையாள, கன்னட படங்களிலும் நடித்திருந்தாலும் ஸ்ருதியை தமிழக ரசிகர்களிடையே அடையாளம் காட்டியது தென்றல் சீரியல்தான். விஜய் டிவியின் 'ஆபீஸ்' ஸ்ருதியை வே...