Friday, February 7
Shadow

Tag: நடிப்பது

இந்தியன் 2-வில் ராகுல் பிரித் சிங்க்கு ஜோடியாக நடிப்பது யார்?

Latest News, Top Highlights
  நடிகை ராகுல் பிரித் சிங், அண்மையில் வெளியான சூரியாவின் என்ஜிகே படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கம் இந்த படத்தில் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் பிரியா பவானி சங்கரும் நடிக்க உள்ளார். அனிருத் இசை அமைக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்தியன் 2-வில் ராகுல் பிரித் சிங்க்கு ஜோடியாக பிரபல நடிகர் சித்தார்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

கணவருடன் இணைந்து நடிப்பது பற்றி பிரபல இசையமைப்பாளரின் மனைவி பதில்

Latest News, Top Highlights
நடிகர்கள் தங்கள் மனையுடன் இணைந்து படத்தில் நடித்து வருவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சினிமாவில் பாடல்கள் பாடி வரும் பாடகி சைந்தவியின் நீங்கள் உங்கள் கணவருடன் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் எனது கணவர் நடிப்பு, இசை என நிற்கமுடியாமல் ஓடி கொண்டிருப்பத்தை நேரடியாக பார்க்கிறேன். இதே போன்று என்னால் நடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். இப்படியிருக்கும் போது, எப்படி அவருடன் இணைந்து நடிப்பது? அவருடன் இணைந்து நடிப்பதற்கு சாத்தியமே இல்லை என்றார். இவர் கடந்த 2013ம் ஆண்டில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாசை காதல் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது....
விஜய் உடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது:  நடிகர் ஜாக்கி ஷெராப்

விஜய் உடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது: நடிகர் ஜாக்கி ஷெராப்

Latest News, Top Highlights
விஜய் 63 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தெறி, மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் அட்லீ விஜய் 63 படத்துக்காக கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் உடன் நடிப்பது குறித்து பேசிய நடிகர் ஜாக்கி ஷெராப், இந்த படப்பிடிப்பில் படக்குழுவினர் என்னை குழந்தை போல் பார்த்துக்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார்....