விஜய் 63 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தெறி, மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் அட்லீ விஜய் 63 படத்துக்காக கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் உடன் நடிப்பது குறித்து பேசிய நடிகர் ஜாக்கி ஷெராப், இந்த படப்பிடிப்பில் படக்குழுவினர் என்னை குழந்தை போல் பார்த்துக்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார்.