திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம் – அமலா பால்
சமீபத்தில் அமலா பால் நடிப்பில் உருவான ஆடை திரைப்படம் வெளியானது. அப்படத்தின் டீசர் வெளியான போதே பலர் அப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், சொல்லப்பட்ட தேதியில் வெளியிடாமல் வேறு தேதியில் அப்படம் வெளியாகி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், மைலாப்பூர் ஐநாக்ஸ் திரையரங்கில் நடைபெற்ற திரைப்பட விழாவில் இயக்குனர் பாரதி ராஜாவும், அமலாபாலும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
அப்போது பேசிய நடிகை அமலா பால், திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம் என தெரிவித்தார். நாம் பிறக்கும் போது ஆடையுடன் பிறக்கவில்லை என்றும், அதே போல், யாரும் சாதி மதங்களுடன் பிறக்கவில்லை எனவும் அமலாபால் குறிப்பிட்டார்....