Friday, February 7
Shadow

Tag: #நாகர்ஜூனா

தனுஷுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் ஸ்டார்

தனுஷுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் ஸ்டார்

Latest News, Top Highlights
தனுஷ் நடிப்பில் தற்போது ‘மாரி 2’ உருவாகி வருகிறது. பாலாஜி மோகன் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தை தனுஷே இயக்கி, நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷுடன், நாகார்ஜுனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. "முதலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அவரால் நடிக்க முடியாததால், தெலுங்கில் மற்றொரு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜுனாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிய...