Sunday, June 21
Shadow

Tag: படத்தில்

ஜெர்சி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற  ஹரீஷ் கல்யாண்

ஜெர்சி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற ஹரீஷ் கல்யாண்

Latest News, Top Highlights
வாழ்க்கையின் பெரும்பாலான ஆச்சர்யங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தான் வரும். குறிப்பாக, சினிமாவில், சிவப்பு கம்பளங்கள் தன்னிச்சையாக விரிக்கப்படும். அப்படி தான் தெலுங்கு சினிமாவில் ஹரீஷ் கல்யாணுக்கும் ஒருவித வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை கவர்ந்த ஹரீஷ் கல்யாண், தெலுங்கு சினிமாவிலும் நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜெர்சி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பெரும் அளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறார். சமூக வலைத்தளங்களிலும், விமர்சனங்களிலும் அவர் நடித்த சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. "இது முற்றிலும் நானே எதிர்பாராதது, என் கதாபாத்திரத்தை கவனித்து, இந்த அளவிற்கு என்னை பாராட்டுவார்கள் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. தெலுங்கு ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த...
போதை ஏறி புத்தி மாறி படத்தில் இணைந்தார் மீரா மிதுன்

போதை ஏறி புத்தி மாறி படத்தில் இணைந்தார் மீரா மிதுன்

Latest News, Top Highlights
அறிமுக இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் குறும்பட பிரபல நாயகன் தீரஜ் நாயனாக அறிமுகமாகும் படம் 'போதை ஏறி புத்தி மாறி'. இந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல் அழகி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மீரா மிதுன் ஒப்பந்தமாகி உள்ளார். இது குறித்து நடிகை மீரா மிதுன் கூறுகையில், இந்த படம் 'தடம்' மாதிரி ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவைக்கும் த்ரில்லர் படம். தலைப்புக்கு உண்டான சம்பந்தத்தை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்....
எழில்-ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைக்கிறார் நடிகை ஈஷா ரேப்பா

எழில்-ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைக்கிறார் நடிகை ஈஷா ரேப்பா

Latest News, Top Highlights
பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் இந்த நிறுவனம். எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை தயாரித்து வருகின்றனர். சி.சத்யா இசையமைக்கும் இந்தப்படத்தின் நாயகியாக ஈஷா ரேப்பா நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது. எழில் வேலைன்னு வந்தா வெளைக்காரன் மற்றும் சரணவன் இருக்க பயமேன் ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்தை ஈசிஆர் சாலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் டோலிவுட் நடிகை ஈஷா ரேப்பா முக்கிய வேடத்தில் நடக்க உள்ளார். தமிழ் படமான 'ஒய்' படத்திற்கு பின்னர் நடிகை ஈஷா ரேப்பா நடிக்கும் இரண்டாவது படமாகும். இந்த படத்தில் நடிகர் சதீஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்நிலையில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா மற்ற...
டிராமா படத்தில் ஜன்னி ஐயர் கேரக்டர் குறித்த புதிய அப்டேட்

டிராமா படத்தில் ஜன்னி ஐயர் கேரக்டர் குறித்த புதிய அப்டேட்

Latest News, Top Highlights
டிராமா படத்தில் தான் எழுத்தாளராக நடிப்பதாக நடிகை ஜன்னி ஐயர் தெரிவித்துள்ளார். நடிகர் அசோக் செல்வன் உடன் தான் நடிக்கும் படம் குறித்து பேசிய பேசிய ஜனனி ஐயர், இந்த படத்தில் நேர்மையான கேக்ரட்டரில் நடிக்கிறேன். படத்தில் எழுத்தாளராக நான் நடிக்கிறேன். இந்த படத்தின் 80 சதவிகித ஷூட்டிங் முடிந்து விட்டது. இன்னும் சில நாட்கள் ஷூட்டிங்கே பாக்கியுள்ளது. இந்த படத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட நாங்கள் முடிவு செய்துளோம். மேலும் படத்தின் ஷூட்டிங்கிற்காக, நனகுள் கோயம்புத்தூர் மற்றும் ஊட்டிக்கு பயணமாக உள்ளோம். அங்கு பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என்றார். இந்த படம் மற்றும் மற்றொரு முக்கிய வேடத்தில் நடக்கும் நடிகை ஐஸ்வரியா மேன்னன் கேரக்டர் குறித்து பேசிய சந்தீப், மனிதர்களின் மனதில் உள்ளே ஏற்படும் பிரச்சினை குறித்தும் அதனால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்தும் முழுமையான எமோசன்களுடன் படத்தில் காட்...
கார்த்தி-ஜோதிகாவின்  அடுத்த படத்தில் அன்சன் பால்

கார்த்தி-ஜோதிகாவின் அடுத்த படத்தில் அன்சன் பால்

Latest News, Top Highlights
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் நடித்தவர் வளர்ந்து வரும் மலையாள நடிகர் அன்சன் பால். சமீபத்தில் வெளிவந்த 90எம்எல் படத்தில் ஓவியா, பாய்பிரண்டாக வரும் அந்த சிக்ஸ் பேக்ஸ் நடிகர் தான் அன்சன் பால். அவர் இப்போது கார்த்திக்கு வில்லனாக நடிக்கப்போகிறார். பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பின் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தில் அன்சன் பால். வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக கெட்அப் மாற வேண்டியது இருப்பதால் அன்சன் பால், அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது....