Saturday, February 14
Shadow

Tag: #பார்த்திபன்

புதிய கூட்டணியா? விஜய்யை சந்தித்த பிரபல இயக்குநர்

புதிய கூட்டணியா? விஜய்யை சந்தித்த பிரபல இயக்குநர்

Latest News, Top Highlights
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை முத்துக்காடு அருகில் நடைபெற்றது. இதில் விஜய்யின் சில காட்சிகளையும், பாடல் காட்சியையும் படமாக்கி வந்தார்கள். தற்போது அந்த பாடல் காட்சி முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யை, நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் நேரில் சந்தித்து இருக்கிறார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயரம் எப்படி ஆழத்தில்? அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..! அமைதியாய்... அந்த உயர் நட்சத்திரம். சிரிப்பில் கூட இதயம் விஜயம்! மகனின் பெருமை பூரிப்பாக, ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!... என்று பதிவு செய்திருக்கிறார் பார்த்திபன்....
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலையில்லை: பார்த்திபன்

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலையில்லை: பார்த்திபன்

Latest News, Top Highlights
“ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கேணி”. தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். முழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனு ஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார...
சிலுக்கு போன்ற நாயகியை தேடும் முன்னணி இயக்குநர்

சிலுக்கு போன்ற நாயகியை தேடும் முன்னணி இயக்குநர்

Latest News, Top Highlights
கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு பிறகு இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் `உள்ளே வெளியே-2'. கடந்த 1993ம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான `உள்ளே வெளியே' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் அந்த படத்தில் இடம் பெற்ற இரட்டை அர்த்த வசனங்கள் தான். அந்த வகையில், `உள்ளே வெளியே-2' படத்தின் பணிகளில் தற்போது பிசியாகி இருக்கிறார் பார்த்திபன். அந்த படத்திற்கான கலைஞர்கள் வேட்டையில் தீவிரமாக இறங்கியிருக்கும் பார்த்திபன், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை இணைய தளம் மூலம் தேடி வருகிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ‘2018ல் துவங்கும் உள்ளே வெளியே கமர்ஷியல் காமெடி படத்திற்கு, 18 வயதில் அமைதி-வசீகரமான பெண்ணும், 28 வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு போன்ற பெண்ணும், 38 வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவ...