Friday, March 13
Shadow

புதிய கூட்டணியா? விஜய்யை சந்தித்த பிரபல இயக்குநர்

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது.

முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை முத்துக்காடு அருகில் நடைபெற்றது. இதில் விஜய்யின் சில காட்சிகளையும், பாடல் காட்சியையும் படமாக்கி வந்தார்கள். தற்போது அந்த பாடல் காட்சி முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யை, நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் நேரில் சந்தித்து இருக்கிறார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயரம் எப்படி ஆழத்தில்?

அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..!
அமைதியாய்… அந்த உயர் நட்சத்திரம்.
சிரிப்பில் கூட இதயம் விஜயம்!

மகனின் பெருமை பூரிப்பாக,
ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!…

என்று பதிவு செய்திருக்கிறார் பார்த்திபன்.

Leave a Reply