‘பிரேமம்’ பட புகழ் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் படத்தில் சிம்பு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படம் வருகிற நவம்பர் 11-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படமும் எப்பவும் போல பஞ்சாயத்துல தான் இருக்கு இன்னும் உறுதியாக ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை என்று சில செய்திகள் கசிந்துள்ளது .
இப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பில்லா -3’ படத்தில் சிம்பு நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், ‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படமொன்றில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ படம் மலையாள ரசிகர்களை மட்டுமில்லாது, தமிழ் ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது.
மலையாள படம் ...
