சவரக்கத்தி – திரைவிமர்சனம் (தங்க கத்தி…) Rank3.5/5
இயக்குனர் மிஷ்கினின் சகோதரர் ஆதித்யன் இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்த ‘சவரக்கத்தி’. இப்படத்திற்கு கதை, வசனம், திரைக்கதை அமைத்திருக்கிறார் மிஷ்கின். மேலும், மிஷ்கின், ராம் மற்றும் பூர்ணா முன்னனி நடிகர்களாக நடித்திருக்கிறார்கள்.
ராம் ஒரு சாதாரண சவரக்கத்தி தீட்டி சவரம் செய்யும் ஒரு கூலித் தொழிலாளி. தன் தொழிலையும் தனது அன்பான காது கேளாத மனைவி பூர்ணா மற்றும் இரண்டு குழந்தைகளையும் அளவுக்கு அதிகமாக காதல் செய்யும் ஒரு மனிதன்.
நிறை மாத கர்ப்பிணியான பூர்ணாவின் உடன் பிறந்த சகோதரரின் திருமணத்திற்கு தனது மனைவி, குழந்தையோடு ராம் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மிஷ்கினின் கார் அவரை கீழே தள்ளி விட கோபத்தில் மிஷ்கினை அடித்து விடுகிறார் ராம்.
கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து சென்றுவிடுகிறார் ராம். மிகப்பெரிய ரெளடியான மிஷ்கின், தன்னை அடித்த ராமை கொலை செய்யாமல் விட மாட்டேன்...