விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்கும் ரோபோ
விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சத்யேஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 23-ல் துவங்க இருக்கிறது.
வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் உலா வந்தன. தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஸ்வாசம் படத்தில் ரோபோ சங்கர் முழு காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், 50 நாட்களை படத்திற்காக ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெள...