Saturday, February 15
Shadow

Tag: ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினி – சிவா இணையும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தை விஸ்வாசம் படத்தை இயக்கிய இயக்குனர் சிவா இயக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. தற்போது ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் பட சூட்டிங்களில் பிசியாக இருந்து வருகிறார். இந்த படம் வரும் 2020 பொங்கல் அன்று ரீலிஸ் ஆக உள்ளது....
தர்பார் ஷூட்டிங்கிற்காக ரஜினி ஜெய்பூர் பயணம்

தர்பார் ஷூட்டிங்கிற்காக ரஜினி ஜெய்பூர் பயணம்

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் 'தர்பார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் முலம் ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு சென்றார்.

ரஜினி, அஜித்துடன் ஜோடியாக நடிக்க ஆசை: அக்சரா ரெட்டி

Latest News, Top Highlights
முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆசையாக உள்ளதாக அழகி அக்சரா ரெட்டி தெரிவித்தது உள்ளார். கேரளாவில் கடந்த வாரம் ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா 2019’ பட்டத்திற்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 22 மாநிலங்களை சேர்ந்த 240 பேர் கலந்துகொண்டனர். இதில் தமிழகம் சார்பில் சென்னையை சேர்ந்த அக்சரா ரெட்டி ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா 2019’ பட்டத்தை வென்றார். இதனையடுத்து வரும் அக்டோபர் 17மாதம் துபாயில் நடைபெறும் ‘மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019’ பட்டத்திற்கான போட்டியில் அக்சரா ரெட்டி இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "தமிழ் படங்களில் நடிக்க நான் தயாராக உள்ளேன். ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது" என்று அவர் கூறியுள்ளார்....
ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் ‘தர்பார்’ நாளை தொடங்குகிறது

ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் ‘தர்பார்’ நாளை தொடங்குகிறது

Latest News, Top Highlights
'பேட்ட' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. நாளை (ஏப்ரல் 10) மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது இந்த படம் குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், படக்குழு. 'தர்பார்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். மேலும், 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்....
காலா சண்டைக்காட்சி லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

காலா சண்டைக்காட்சி லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் `காலா' படத்தை முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டு சமீபத்தில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி `காலா' படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி - பா.இரஞ்சித் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 14 நொடிகள் அடங்கிய அந்த வீடியோவில் தன்னை அடிக்க வரும் ஒருவரை, ரஜினி உதைப்பது போன்று அந்த வீடியோ முடிகிறது. அந்த வீடியோவின் பின்னணியில் தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந...
ரஜினி மன்றத்தில் 50 லட்சம் பேர் இணைந்தனர்!

ரஜினி மன்றத்தில் 50 லட்சம் பேர் இணைந்தனர்!

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பித்திருக்கும் ரஜினி மன்றத்தில் இதுவரை 50 இலட்சம் பேர் மன்றத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன் தான் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். ரஜினி அதற்காக புதிய இணையதள முகவி ஒன்றையும் அறிவித்தார். www.rajinimandram.org என்கிற முகவரி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் மூலமாக பொதுமக்கள் ரஜினி மன்றத்தில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து பதிவு செய்து வருகிறார்கள். இதுவரையில் 50 லட்சம் பேர் இணையதளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இணைந்துள்ளனர். பலதரப்பட்ட மக்களும் ரஜினி மன்றத்தில் போட்டி போட்டு இணைந்து வருகின்றனர். இன்னும் பலர் ரஜினி மன்றத்தில் தங்களை இணைத்து வருகின்றனர்....
ரகுவரன் இசையமைத்து பாடிய பாடலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!

ரகுவரன் இசையமைத்து பாடிய பாடலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!

Latest News, Top Highlights
நடிகர் ரகுவரன் தமிழ்த் திரையுலகத்தில் மறக்க முடியாத ஒரு நடிகர், 1982 ஆம் ஆண்டு வெளிவந்த ஏழாவது மனிதன் படத்தில் அறிமுகமானார். வில்லனாக பல படங்களில் தன்னுடைய மிரட்டலை வெளிப்படுத்தி ஒரு சிறந்த நடிகனாக தன்னை முன்னிலை படுத்தியிருந்தார். பாட்ஷா, அருணாச்சலம் என அவர் நடித்த படங்களில் சிலவற்றை காலத்தாலும் மறக்க முடியாத ஒன்று. உடல்நலக்குறைவுக் காரணமாக 2008 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். ரகுவரன் சிறந்த இசைக் கலைஞர் என்பது பலருக்கும் தெரியாது. லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் பியானோவில் தேர்ச்சி பெற்றவர். இசை மீது அவருக்குள்ள ஆர்வத்தால் அவர் 30க்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்து பாடி வைத்துள்ளார். அவற்றை ரகுவரின் மனைவி நடிகை ரோகிணி, மகன் ரிஷிவரன் ஒரு இசை ஆல்பமாகத் தொகுத்துள்ளார்கள். ரகுவரன் - எ மியூசிக்கல் ஜர்னி என பெயரிடப்பட்டுள்ள அந்த ஆல்பத்தை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளா...
நெல்லை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு

நெல்லை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு

Latest News, Top Highlights
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற அதிகாரப்பூர்வ நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வெளியிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால், கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதேசமயம், ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இணையதளம் மற்றும் செயலி வெளியிடப்பட்டு ரஜினி ரசிகர்களை ஒரு குடையின் கீழ் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தனது நம்பிக்கைக்கு பாத்திரமான சிலரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்துள்ள ரஜினி, அவர்களை கொண்டு ரசிகர் மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார். முதற்கட்டமாக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செ...
ரஜினியும் சில அரைவேக்காடுகளும்… சரியான பதிலடி!

ரஜினியும் சில அரைவேக்காடுகளும்… சரியான பதிலடி!

Latest News, Top Highlights
வெறும் 20 நிமிட பேச்சு .... அரசியல்வியாதிகள் அலறுகிறார்கள்.. பல வருங்கால முதல்வர்களுக்கு பீதி கிளம்பிவிட்டது... மீடியா வியாபாரிகள் தொழில் சூடு பிடித்துவிட்டது... ஆனால் சில அரைவேக்காடுகள் கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறது... இதுவரை வந்த அனைத்து விமர்சனங்களுக்கும் ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தபின்னரும் நம் அறிவு ஜீவிகளின் கல்லெறிதல் நிற்கவில்லை. அப்பேற்பட்ட உலக மகா யோக்கியர்களுக்குத்தான் இந்த பதிவு... ரஜினியின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் : ஒரு தமிழந்தான் முதல்வராக வேண்டும். ரஜினி வரக்கூடாது... சினிமாகாரன் ஆண்டது போதும். இதுவரை தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் ரஜினி ? எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கவில்லை ? கர்நாடகாவில் சொத்து வாங்கி குவித்துள்ளார். படம் வெளிவரும்போது ஓடுவதற்க்காக மட்டும் அரசியல் பேசுவார்... தில் இருப்பவர்கள் இந்த பதில்களை எதிர்கொள்ளல...
ரஜினிக்கு நானே தொண்டன்… அவருக்காக ரோட்ல இறங்குவேன் – விஷால்!

ரஜினிக்கு நானே தொண்டன்… அவருக்காக ரோட்ல இறங்குவேன் – விஷால்!

Latest News, Top Highlights
டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தனது அரசியல் பாதையை துவங்கி வைத்தார் ரஜினி. சில இடங்களில் எதிர்ப்பும் பல இடங்களில் ஆதரவும் வந்த வண்ணம் உள்ளன. மூத்த கலைஞர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் ரஜினியை வாழ்த்து வரவேற்றுள்ளனர். ரஜினியின் அரசியல் குறித்து விஷால் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கட்சி தொடங்கி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஜினி சார் அறிவித்துள்ளார். அரசியல் என்பதும் சமூக சேவைதான். தலைவன் அரசியல்ல இறங்கிட்டார். நான் அவருக்குத் தொண்டனா ரோட்ல இறங்கி அத்தனை தொகுதியிலும் பிரச்சாரம் பண்ணுவேன். அவருக்கு உதவியா இருப்பேன்," என்றார்....