Saturday, June 3
Shadow

Tag: ரீலிஸ்

சிம்புவின் “மஹா” பட ரீலிஸ்…. படக்குழு விளக்கம்

Latest News, Top Highlights
நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 50-வது படம் 'மஹா'. ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். சிம்பு, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது.கொரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன், இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. இந்நிலையில், மஹா திரைப்படம் முழுமையாக முடிக்கப்படவில்லை என்றும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை செய்யபட்டு விட்டதாகவும் இணைய வெளியிலும், ஊடகங்களிலும் தகவல் வெளியாகியன. இந்நிலையில், மஹா படம் குறித்த உண்மை தகவல்களை Etcetera Entertainment நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: மஹா படத்தின் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்க...
விஜய் நடிக்கும் பிகில் ரீலிஸ் தேதி குறித்து லேட்டஸ்ட் தகவல்

விஜய் நடிக்கும் பிகில் ரீலிஸ் தேதி குறித்து லேட்டஸ்ட் தகவல்

Latest News, Top Highlights
இயக்குனர் அட்லீ இயக்கும் பிகில் படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. படமும் அமோகமாக தயாராகி வருகிறது, அவ்வப்போது வரும் பட தகவல்களை ரசிகர்கள் ஆவலாக தெரிந்துகொண்டு வருகின்றனர். பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படம் தீபாவளி ரிலீஸ் என்பது மட்டும் தான் உறுதியாகியுள்ளது, எந்த தேதி என்பது தெரியவில்லை, இந்த நிலையில் படம் அக்டோபர் 24ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது....
ஜிவி பிராகஷின்  ‘100 பிரன்ச்ட் காதல்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

ஜிவி பிராகஷின் ‘100 பிரன்ச்ட் காதல்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
நடிகர் ஜிவி பிராகஷ் - சாலினி பாண்டே நடிக்கும் 100 பிரன்ச்ட் காதல் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தினத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக்கியுள்ள அசுரன் படமும் வெளியாக உள்ளது. தெலுங்கில் நாக சைத்தான்யா மற்றும் தம்மன்னா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்தான 100 பிரசன்ட் லவ் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கியுள்ள '100 பிரன்ச்ட் காதல்' படத்தை எம்எம் சந்திர மவுலி யக்கியுள்ளார். இதில் நாசர், அம்பிகா, சதீஷ், யோகிபாபு மற்றும் லிவ்விங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளனர்....

சூர்யாவின் காப்பன் ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான என்.ஜி.கே திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், அடுத்ததாக அவர் நம்பி இருக்கும் திரைப்படம் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'காப்பன்' திரைப்படத்தை தான். இந்தபடம் வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார், வில்லனாக நடிகர் ஆர்யாவும், கதாநாயகியாக நடிகை சாயிஷாவும் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி, பொம்மல் இராணி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து அனைத்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் முடிக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் 'சிரிக்கி' பாடல் வெளியாகி ஹிட் ஆன நிலையில், மற்ற பாடல்களுக்கும் ரசிகர்கள் ம...
தடைகளை தாண்டி உறுதியானது நயன்தாராவின் கொலையுதிர் காலம் ரீலிஸ் தேதி

தடைகளை தாண்டி உறுதியானது நயன்தாராவின் கொலையுதிர் காலம் ரீலிஸ் தேதி

Latest News, Top Highlights
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம் படத்தின் ரீலிஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம் படத்தின் வரும் 26ம் தேதி ரீலிஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த படம் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பணபிரச்சினை காரணமாக இந்த படத்தின் வெளியிடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பில்லா 2 மற்றும் உன்னைப் போல் ஒருவன் படத்தை இயக்கிய இயக்குனர் சகிரி டோலேடி இயக்கியுள்ளார். நடிகை நயன்தாரா வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை மதியழகனின் எச்சிட்ரா எண்டர்டேய்ன்மென்ட் தயாரித்துள்ளது....
ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
நடிகை ஜோதிகா, அறிமுக இயக்குனர் எஸ் ராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ராட்சசி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை யோகிபாபு நடிப்பில் வெளியாக உள்ள தர்ம பிரபு, விமல் நடிப்பில் வெளியாக உள்ள களவாணி 2 ஆகிய படம் வெளியாகும் ஜூன் 28ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் ஜோதிகா, அரசு பள்ளி ஆசிரியை வேடத்தில் நடித்துள்ளதோடு, மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தவும் பாடு படுவராக நடித்துள்ளார். எஸ் ஆர் பிரபுவின் டிரீம் வாரியார் பிச்சர்ஸ் தயாரிப்பில், நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் சத்தியன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தில் டிரைலர்கள், சூர்யாவின் என்ஜிகே உடன் இணைக்கப்பட்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...
அதர்வா-ஹன்சிகா நடிக்கும்  ‘100’ பட ரீலிஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

அதர்வா-ஹன்சிகா நடிக்கும் ‘100’ பட ரீலிஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில், நடிகர் அதர்வா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் '100'. இந்த படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்துள்ளார். காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் மே 3ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் திரையிடும் தேதி மே 9ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
அருள்நிதி நடிக்கும் ’கே -13’ படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

அருள்நிதி நடிக்கும் ’கே -13’ படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
வம்சம் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் அருள்நிதி. அதன்பிறகு இவர் நடித்த மௌனகுரு படம் அருள்நிதிக்கு நல்ல நடிகர் என்ற அந்தஸ்த்தை கொடுத்தது. வித்யாசமான கதைகளை கொண்ட படங்களில் தேர்தெடுத்து நடிக்கும் இவர் பிருந்தாவனம் படத்தில் வாய் பேச இயலாதவராக நடித்து. தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார். இப்போது அருள்நிதி பரத் நீலகண்டன் இயக்கத்தில் கே13 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியா ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். சாம் சி எஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த நிலையில் இப்போது கே-13 படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த படம் வரும் மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் ரீலிஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்த...
பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்று படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்று படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாகி வருகிறது. கிரிக்கெட் பிரபலங்கள் தோனி, சச்சின் மற்றும் மன்மோகன் சிங் போன்றவர்களின் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வரிசையில் உருவாக்கியுள்ளது தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் திரைப்படம் இந்த திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரதமர் மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 5-ஆம் நாள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விவேக் ஓப்ராய் மோடி வேடத்தில் தோன்றும் 9 வித ’கெட்டப்’ கொண்ட போஸ்ட்டர்களும் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இவருடன் போமன் இரானி, பர்கா பிஷ்ட், மனோஜ் ஜோஷி, ஜரினா வஹாப், பிரஷாந்த் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் போஸ்ட்டரு...