Saturday, March 25
Shadow

Tag: #விக்ரம்

விக்ரம் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.75/5)

Latest News, Review
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். காவல் துறையில் இருப்பவர்களை மாஸ்க் அணிந்த மர்ம கும்பல் கொலை செய்கிறது. இதில் காளிதாஸ் ஜெயராமும் கொல்லப்படுகிறார். அதுபோல் காவல் துறையில் சம்பந்தம் இல்லாமல் இருக்கும், காளிதாசனின் வளர்ப்பு அப்பா கமலும் கொல்லப்படுகிறார். மாஸ்க் மனிதர்களை கண்டுபிடிக்க, சீக்ரெட் ஏஜென்சிஸ் ஆக இருக்கும் பகத் பாசிலிடம் ஒப்படைக்கப்படுகிறது. மாஸ்க் மனிதர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பகத் பாசிலுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் பகத் பாசில், மாஸ்க் மனிதர்களை கண்டுபிடித்தாரா? கமலை மாஸ்க் மனிதர்கள் கொலை செய்ய காரணம் என்ன? மாஸ்க் மனிதர்கள் காவல் துறையினரை கொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கமல், முதல் பாதியில் கர்ணனாகவும...
சூரியபுத்ரா மகாவீர் கர்ணன் படத்தில் விக்ரம் விலகியதன் காரணம் என்ன?

சூரியபுத்ரா மகாவீர் கர்ணன் படத்தில் விக்ரம் விலகியதன் காரணம் என்ன?

Latest News, Top Highlights
சூரியபுத்ரா மகாவீர் கர்ணன் படத்தில் விக்ரம் விலகியதன் காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சூரியபுத்ரா மகாவீர் கர்ணன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த படம் நீண்ட காலமாக செய்திகளில் இடம் பெற்று வருகிறது. மகாபாரத காவியத்திலிருந்து எடுக்கப்பட்ட கர்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் நடிகர் விக்ரம் கர்ணனின் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும், ஆர்.எஸ்.விமல் இந்த திட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படக்குழுவினர் இப்போது மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் அதிகாரப்பூர்வ சின்னத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த படம் கர்ணனின் கதையை மகாபாரதத்தின் ஹீரோவின் கண்ணோட்டத்தில் விவரிக்கும். பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் படத்தை வாசு பகானி, தீப்சிகா தேஷ்முக் மற்றும் ஜாக்கி பகானி ஆகியோர் தயாரிக்கின்றனர். முன்னதாக, 2018 ஆம் ஆண்டில், வி...
மஹாவீர் கர்ணா படப்பிடிப்பை தொடங்கினார் விக்ரம்

மஹாவீர் கர்ணா படப்பிடிப்பை தொடங்கினார் விக்ரம்

Latest News, Top Highlights
விக்ரம், கடாரம்கொண்டான் படத்தில் தன் வேலைகளை முடித்துவிட்டு பிரம்மாண்டமாக உருவாகும் மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் செலவில் மகாவீர் கர்ணா என்றப் படம் உருவாகி வருகிறது. இதில் இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் பலர் நடிக்க, கர்ணன் வேடத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இப்படத்தை மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார். இப்படத்தின் வசனங்களைப் பல எழுத்தாளர்கள் எழுதுகின்றனர். அதில் தமிழ் வடிவத்துக்கான வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். இப்படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கிறது.. விக்ரம் இல்லாத மற்ற நடிகர் நடிகைகளின் காட்சிகளைப் படக்குழு இதுவரைப் படமாக்கி வந்தது. இந்நிலையில் கடாரம்கொண்டான் பட வேலைகளை முடித்துள்ள விக்ரம் இப்போது கரணா படத்தின் படப்பிடிப்...

நடிகர் விக்ரம் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
விக்ரம் தமிழ்த் திரைப்படங்களில் பிரதானமாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர். விக்ரம் 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற...
வர்மா படக்குழுவுடன் சென்னை திரும்பிய விக்ரம் மகன்

வர்மா படக்குழுவுடன் சென்னை திரும்பிய விக்ரம் மகன்

Latest News, Top Highlights
தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி இன்னமும் தேர்வாகவில்லை. பாலா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நேபாளத்தில் துவங்கியது. மகனின் முதல் படப்பிடிப்பை காண்பதற்காக விக்ரமும் படக்குழுவினருடன் நேபாளம் சென்றார். அங்கு அவர் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டார். ‘வர்மா’ படப்பிடிப்பு நேபாள தலைநகர் காத்மண்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து வருந்த நிலையில், படக்குழு தற்போது சென்னை விரைந்துள்ளது. மீண்டும் சென்னை திரும்புவதாக படத்தின் நாயகன் துருவ் விக்ரம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதிலிருந்து நேபாளத்தில் நடத்தப்பட்டு வந்த முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில...
பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் – முக்கிய தகவல்

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் – முக்கிய தகவல்

Latest News, Top Highlights
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். `வர்மா' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் இன்று துவங்கி உள்ளது. துருவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட இருக்கிறது. நாயகி தேர்வு செய்யப்பட்ட பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பாலா இயக்கும் இந்த படத்தின் வசனங்களை பிரபல எழுத்தாளும், சினிமா இயக்குநருமான ராஜூ முருகன் எழுதியிருக்கிறார்.இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்....
32 மொழிகளில் தயாராகும் விக்ரம் படம்!

32 மொழிகளில் தயாராகும் விக்ரம் படம்!

Latest News, Top Highlights
துருவ நட்சத்திரம், சாமி - 2 படங்களில் நடித்து வரும் விக்ரம், கமல் தயாரிப்பிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் ஆர்.எஸ். விமல் தயாரிக்கும் வரலாற்று படமான மகாபாராத கதையான மஹாவீர் கர்ணா படத்தில், விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். இந்த படம், 32 மொழிகளில் உருவாக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தட்டிக் கொடுத்த விக்ரம்: நெகிழும் நடிகர் மாஸ் ரவி

தட்டிக் கொடுத்த விக்ரம்: நெகிழும் நடிகர் மாஸ் ரவி

Latest News, Top Highlights
விக்ரம் நடித்து பொங்கலுக்கு வந்துள்ள படம் 'ஸ்கெட்ச்.' இதில் விக்ரமுடன் மோதும் எதிர் தரப்பு அணியில் ஆர்.கே.சுரேஷின் தம்பியாக நடித்துள்ளவர் நடிகர் மாஸ் ரவி. ஒரு பெரிய நடிகரான விக்ரம் படத்தில் நடித்ததில் தன் மேல் விளம்பர வெளிச்சம் விழுந்துள்ளதாகப் பரவசத்துடன் கூறுகிறார் மாஸ் ரவி. தான் கடந்து வந்த பாதை பற்றி அவர் கூறும் போது, "எனக்குச் சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம். டி.வி.யில் கூட ஒரு நாளைக்கு நாலைந்து படம் பார்க்கிற அளவுக்கு மோகம். எங்கள் ஊரிலிருந்து சினிமா தியேட்டருக்கு ஏழெட்டு கி.மீ. போக வேண்டும்.. நான் அந்த தூரத்தை நடந்தே செல்வேன். அப்படி நடந்து சென்றே பல படங்கள் பார்த்திருக்கிறேன். பள்ளியில் எக்ஸாம் இருந்தால் கூட படம் பார்க்காமல் இருக்க மாட்டேன். பள்ளி நாட்களில் சிவாஜி நடித்த "ஜிஞ்ஜினுக்கான்" பாட்டுக்கு நடனம் ஆடினேன். அதற்கு முதல் பரிசு கிடைத்தது. விருதும் கொடுத்தார்கள், ...
கமலுடன் இணைந்த விக்ரம்

கமலுடன் இணைந்த விக்ரம்

Latest News, Top Highlights
விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அந்த படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாகவும், கமல் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து கமல் அவரது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, `திரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்.' என்று கு...
ஸ்கெட்ச் – விமர்சனம்

ஸ்கெட்ச் – விமர்சனம்

Review, Top Highlights
வட சென்னையில் வண்டிகளுக்கு பைனாஸ் செய்து வரும் சேட்டுவிடம் வேலை செய்து வருகிறார் விக்ரம். இவர் டியூ கட்டாத வாகனங்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கி வருகிறார். ஒரு நாள் நாயகி தமன்னாவின் தோழியின் வண்டியை தூக்குகிறார். அப்போது தமன்னாவை பார்க்கும் விக்ரம், அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல ரவுடியாக இருக்கும் பாபுராஜாவின் காரை நண்பர்களுடன் சேர்ந்து தூக்குகிறார். இதனால், கோபமடையும் பாபுராஜா, விக்ரமையும் நண்பர்களையும் பழிவாங்க நினைக்கிறார். சிறிது நாளில் விக்ரமின் நண்பர்களில் ஒவ்வொருத்தராக கொல்லப்படுகிறார்கள். இந்த கொலைகளுக்கு காரணம் யார்? விக்ரமை பாபு ராஜா கொலை செய்தாரா? தமன்னாவுடன் விக்ரம் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் ஸ்கெட்ச் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குவது தனக்கே உ...