Monday, June 22
Shadow

Tag: #அனுஷ்கா

ஜோதிகாவுக்கு பதில் அனுஷ்காவா – ரசிகர்கள் குஷி

ஜோதிகாவுக்கு பதில் அனுஷ்காவா – ரசிகர்கள் குஷி

Latest News, Top Highlights
  பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில், இந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால், டப் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குநர் பாலா படத்தை ரீமேக் செய்யலாம் என்று கூறியிருக்கிறார். மேலும் ஜோதிகா கேரக்டருக்கு அனுஷ்கா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவரே கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து தயாரிப்பு தரப்பு அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனுஷ்கா நடிக்க மறுத்தால் பொருத்தமான வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும், மிக விரைவில்...
பாகமதி – திரைவிமர்சனம் Rank 3/5

பாகமதி – திரைவிமர்சனம் Rank 3/5

Review, Top Highlights
நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான அனுஷ்கா, கணவனாகப்போகும் தன் காதலனை சுட்டுக்கொன்ற வழக்கில் சிறையில் இருக்கிறார். நேர்மையான மத்திய அமைச்சராக ஜெயராம் மீது அவதூறு பரப்ப, சில அரசியல்வாதிகள் முயற்சி செய்கிறார்கள். இதற்காக சிபிஐ அதிகாரியான ஆஷா சரத் நியமிக்கிறார்கள். ஜெயராம் மீது குற்றம் சுமத்த போதிய சாட்சியங்கள் இல்லாததால், ஜெயராம் நிர்வாகத்தில் பணிபுரிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனுஷ்காவை, ஜெயராமுக்கு எதிராக திருப்பிவிட திட்டம் தீட்டுகின்றனர். இதற்காக ஜெயிலில் இருக்கும் அனுஷ்காவை, பேய் பங்களா என்று அழைக்கப்படும் பாகமதி கோட்டைக்கு அழைத்து வருகின்றனர். அந்த கோட்டைக்குள் சில அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்கின்றன. ஒரு சில நாட்களில் தான் பாகமதி என்றும், பாகமதியின் உடைகளை எடுத்து போட்டுக் கொண்டும் அங்குள்ளவர்களை மிரட்டுகிறார். அந்தக் கோட்டைக்குள் உண்மையிலேயே நடந்தது என்ன? பாகமதி யார்? பாக...
பெண்ணைத் தொட்டால் கையை வெட்டு – ஆக்ரோஷமான அனுஷ்கா

பெண்ணைத் தொட்டால் கையை வெட்டு – ஆக்ரோஷமான அனுஷ்கா

Latest News, Top Highlights
பாலியல் தொல்லை கொடுக்கும் வக்கிர புத்திக்காரர்களின் கைகளை வெட்ட வேண்டும் என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார். இதுகுறித்து அனுஷ்கா பேசும் போது, “‘பாகுபலி-2’ படத்தில் என்னை தொடுபவர் கையை நான் வெட்டி எறிவதுபோன்று ஒரு காட்சி வரும். நிஜ வாழ்க்கையில் எந்த பெண்ணுக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் கைகளை வெட்ட வேண்டும் என்றுதான் தோன்றும். வக்கிரபுத்திக்காரர்களை சும்மாவிடக்கூடாது. மிருகத்தை வெட்டி நாமும் மிருகமாக மாறலாமா? என்ற எண்ணம் வரலாம். நமது கவுரவத்தை காப்பாற்ற வேண்டியது முக்கியம். பெண்களை தவறான எண்ணத்தோடு தொடும் ஆண்களின் மனதில் அகங்காரம் இருக்கிறது. அதை முதலில் ஒழிக்க வேண்டும். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒருவன் பாகுபலி-2 படத்தில் நடந்த மாதிரியே என்னை அத்துமீறி தொட்டான். அவனை கொல்ல வேண்டும் என்று எனக்கு கோபம் வந்தது. அப்படி செய்ய முடியாமல் ஓங்கி அவனை அறைந்தேன். அந...