Wednesday, February 12
Shadow

பெண்ணைத் தொட்டால் கையை வெட்டு – ஆக்ரோஷமான அனுஷ்கா

பாலியல் தொல்லை கொடுக்கும் வக்கிர புத்திக்காரர்களின் கைகளை வெட்ட வேண்டும் என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.

இதுகுறித்து அனுஷ்கா பேசும் போது,

“‘பாகுபலி-2’ படத்தில் என்னை தொடுபவர் கையை நான் வெட்டி எறிவதுபோன்று ஒரு காட்சி வரும். நிஜ வாழ்க்கையில் எந்த பெண்ணுக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் கைகளை வெட்ட வேண்டும் என்றுதான் தோன்றும். வக்கிரபுத்திக்காரர்களை சும்மாவிடக்கூடாது. மிருகத்தை வெட்டி நாமும் மிருகமாக மாறலாமா? என்ற எண்ணம் வரலாம். நமது கவுரவத்தை காப்பாற்ற வேண்டியது முக்கியம்.

பெண்களை தவறான எண்ணத்தோடு தொடும் ஆண்களின் மனதில் அகங்காரம் இருக்கிறது. அதை முதலில் ஒழிக்க வேண்டும். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒருவன் பாகுபலி-2 படத்தில் நடந்த மாதிரியே என்னை அத்துமீறி தொட்டான். அவனை கொல்ல வேண்டும் என்று எனக்கு கோபம் வந்தது.

அப்படி செய்ய முடியாமல் ஓங்கி அவனை அறைந்தேன். அந்த சம்பவம் நடந்த அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. ஒரு பெண்ணை யாராவது தொட்டால் அதில் அன்பு இருக்க வேண்டும். ஆதரவு இருக்க வேண்டும். பாதுகாப்பை உணர வைக்க வேண்டும். கவுரவமாகவும் இருக்க வேண்டும். அந்த உணர்ச்சி ஒரு தைரியத்தை கொடுக்கும். அதற்கு மாறாக அந்த தொடுதலில் ஆசை இருந்தால் அந்த மாதிரி செய்பவன் கைகளை வெட்ட வேண்டும் என்றுதான் தோன்றும்” என்றார்.

Leave a Reply