நடிகை அம்ரிதா ராவ் பிறந்த தின பதிவு
அம்ரிதா ராவ் என்பவர் இந்திய வடிவழகி மற்றும் நடிகை ஆவார். இவர் பெரும்பானமையாக பாலிவுட் திரைப்படங்களிலும், தெலுங்கு மொழியில் ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான அப் கி பராஸ் எனும் திரைப்படத்தில் முதல்முறையாக நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 2006 ஆம் ஆண்டில் வெளியான விவாஹ் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.
2004 ஆம் ஆண்டில் வெளியான மெயின் ஹூ நா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஸ்டார் டஸ்ட் விருது மற்றும் 2008 இல் வெளியான வெல்கம் டூ சஜ்னாபூர் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் தேர்வு செய்த 50 விருப்பமான பெண்...
