Saturday, April 18
Shadow

Tag: #ஆர்.கே.நகர் #சேரன் #விஷால் #தயாரிப்பாளர்சங்கம் #Vishal #Cheran #RKNagar #RkNagarByElection

வீண் விளம்பரங்கள் தேடுவதை சேரன் நிறுத்த வேண்டும்: விஷால் அறிக்கை

வீண் விளம்பரங்கள் தேடுவதை சேரன் நிறுத்த வேண்டும்: விஷால் அறிக்கை

Latest News, Top Highlights
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சேரன் வீண் விளம்பரங்கள் தேடுவதை நிறுத்த வேண்டும் என்று விஷால் அறிக்கையில் கூறியிருக்கிறார். விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இயக்குநர் சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, இயக்குநர் சேரன் அவர்கள் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தைத் தான் ஏற்படுத்துகின்றன. ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவ...