முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடிக்கும் வாரிசு நடிகர்
அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் தற்போது 'வால்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இயக்குனர்கள், கவுதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் கவுதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூடுதல் தகவல்.
கிரைம் திரில்லர் படமாக உருவாக்கி வரும் வால்டர் தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது. அந்த பெயரில் படம் எடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளதாகவும் வால்டர் தலைப்பு தனக்குத்தான் சொந்தம் என்றும் கூறி தயாரிப்பாளர் சிங்காரவேலன் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. தற்போது இருதரப்பினருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்ப...
