Sunday, June 21
Shadow

Tag: எஸ். பி. முத்துராமன்

இயக்குனர் எஸ். பி. முத்துராமன் பிறந்த தின பதிவு

Birthday, Latest News
தமிழ்த் திரையுலகின் பல்கலைக்கழகம் ஏவிஎம் நிறுவனம் என்றால், அதில் உருவாகிய கலைஞர்கள் ஒரு சினிமா பேராசிரியர்கள். சிவாஜிகணேசன், கமல்ஹாசன் தொடங்கி எண்ணற்ற ஆளுமைகளை ஏவிஎம் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. அப்படி ஏவிஎம்-மால் உருவாக்கப்பட்ட தமிழ் சினிமாவின் முக்கியமான முகம் இயக்குநர் SP.முத்துராமன். கவிஞர் கண்ணதாசனால் ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு உதவி எடிட்டராக தனது பயணத்தைத் தொடங்கிய SP.முத்துராமன், அடுத்த ஐம்பது ஆண்டுகளில் அதே ஏவிஎம் ஸ்தாபனத்தில் இணை தயாரிப்பாளராக அமர்த்தப்படுகிறார் என்றால் அது அவரது கடும் உழைப்புக்குச் சான்று. தமிழ்த் திரையுலகில் இருபத்தைந்து ஆண்டுகளில் எழுபது படங்கள் இயக்கியது சாதனையென்றால், அது அத்தனையும் வியாபாரரீதியாக வெற்றிப்படங்களாக அமைந்தது பெரும் சாதனை. புராணகால திரைப்படச் சூழலிலிருந்து தமிழ் சினிமாவை மீட்டெடுத்து, கதைக்கான முக்கியத்துவத்துடன் ...