Monday, January 12
Shadow

Tag: #சசிகுமார்

சரத்குமார் – சசிகுமார் இணையும் ’நா நா’ – ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Latest News, Top Highlights
"சசிகுமார், சரத்குமார் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. சலீம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நிர்மல்குமார், அரவிந்த்சாமியை ஹீரோவாக வைத்து சதுரங்க வேட்டை 2 படத்தை இயக்கினார். இந்தப் படம் ஃபைனான்ஸ் பிரச்னையில் சிக்கி இருப்பதால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இந்த இரண்டு படங்களை அடுத்து சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் நிர்மல் குமார். கல்பத்ரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு ‘நா நா’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. சசிகுமார்...
மீண்டும் தனது வெற்றிக் கூட்டணியுடன் இணையும் சசிகுமார்

மீண்டும் தனது வெற்றிக் கூட்டணியுடன் இணையும் சசிகுமார்

Latest News, Top Highlights
கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் சுந்தரபாண்டியன். சசிகுமாரின் திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு மிக முக்கியமான இடம் பிடித்தது. சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஆர்.பிரபாகரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இயக்குனராக அறியப்பட்ட எஸ்.ஆர்.பிரபாகரன், தொடர்ந்து 'இது கதிர்வேலன் காதல், 'சத்ரியன்' உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த இரு படங்களுக்கும் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், சசிகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் இணையவிருக்கின்றனர். அதுவும் சுந்தரபாண்டியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையவிருக்கிறார்களாம். தற்போது சசிக்குமார், சமுத்திரக்கனி கூட்டணி 'நாடோடிகள் 2' படப்பிடிப்பை மதுரையில் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் படம் முடிந்த கையோடு 'சுந்தரபாண்டியன்...
நாடோடிகள்-2 குறித்து அஞ்சலி வெளியிட்ட ருசீகர தகவல்

நாடோடிகள்-2 குறித்து அஞ்சலி வெளியிட்ட ருசீகர தகவல்

Latest News, Top Highlights
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் படத்தின் இயக்குநர் சமுத்திரகனியும் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக சசிகுமார், சமுத்திரக்கனி இருவரும் உடல் எடையை குறைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முடிந...
அசுரவதம் செய்ய தயாரான சசிகுமார்

அசுரவதம் செய்ய தயாரான சசிகுமார்

Latest News, Top Highlights
`கொடிவீரன்' படத்தை தொடர்ந்து சசிகுமார் அடுத்ததாக ‘அசுரவதம்’ படத்தில் நடித்து முடித்து முடித்திருக்கிறார். மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், டீசர் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியானது. அதில் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சசிகுமார் தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் `நாடோடிகள்-2' படத்தில் நடித்து வருகிறார்....
சசிகுமார் – சமுத்திரக்கனியின் திடீர் முடிவு

சசிகுமார் – சமுத்திரக்கனியின் திடீர் முடிவு

Latest News, Top Highlights
இயக்குனர் சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘நாடோடிகள்’. 9 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிக்க பழைய தோற்றம் வர வேண்டும் என்று சமுத்திரகனி, சசிகுமார் இருவரும் எடையை குறைக்கும் புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். அதன்படி அசைவ, சமைத்த உணவுகளை சாப்பிடுவதை தற்காலிகமாக நிறுத்தி விட்டார்கள். வேர்கடலை, தேங்காய், இளநீர், கற்றாழை ஜூஸ் போன்ற இயற்கை உணவுக்கு மாறி விட்டார்கள். இது தவிர லாரி டயர்களை உருட்டுவது, பெரிய கயிற்று வடங்களை சுழற்றுவது போன்ற தீவிர உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். “ ‘நாடோடிகள்-2’-ம் முதல் பாகம் போல பேசப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த வித்தியாசமான முயற்சி” என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் அஞ்சலி, அதுல்யா, பரணி, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்....
நாடோடிகள் பற்றிய முக்கிய அறிவிப்பு

நாடோடிகள் பற்றிய முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் "நாடோடிகள் - 2" திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அஞ்சலி, பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்... இப்படத்தின் போட்டோ ஷுட் திருவள்ளூர் அருகே (26/01/18) அன்று நடைபெறுகிறது... இசை -ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - ஏகாம்பரம், கலை - ஜாக்கி, எடிட்டிங் - ரமேஷ், பாடலாசிரியர்- யுகபாரதி, சண்டை பயிற்சி- திலீப் சுப்புராயன், நடனம் - திணேஷ், ஜானி, தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது...