
இயக்குனர் சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘நாடோடிகள்’. 9 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிக்க பழைய தோற்றம் வர வேண்டும் என்று சமுத்திரகனி, சசிகுமார் இருவரும் எடையை குறைக்கும் புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.
அதன்படி அசைவ, சமைத்த உணவுகளை சாப்பிடுவதை தற்காலிகமாக நிறுத்தி விட்டார்கள். வேர்கடலை, தேங்காய், இளநீர், கற்றாழை ஜூஸ் போன்ற இயற்கை உணவுக்கு மாறி விட்டார்கள். இது தவிர லாரி டயர்களை உருட்டுவது, பெரிய கயிற்று வடங்களை சுழற்றுவது போன்ற தீவிர உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். “ ‘நாடோடிகள்-2’-ம் முதல் பாகம் போல பேசப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த வித்தியாசமான முயற்சி” என்று கூறுகிறார்கள்.
இந்த படத்தில் அஞ்சலி, அதுல்யா, பரணி, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.