நடிகை சீமா பிறந்த தின பதிவு
சீமா 1957 மே 22 இல் பிறந்துள்ள ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] இவர் ஏறக்குறைய 250க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்கள், 20 தமிழ்ப் படங்கள், ஏழு தெலுங்குப் படங்கள், நான்கு கன்னடப் படங்கள் மற்றும் ஒரு இந்திப் படத்திலும் நடித்துள்ளார்.
இவர் தனது 14வது வயதில் நடனமாடுபவராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இயக்குநர் லிசா பேபி இயக்கத்தில் நிழலே நீ சாட்சி என்ற படத்தில் ஒரு நாயகியாக நடித்தார். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டது. பின்னர் அப்படம் நடிகர் விஜயன் மற்றும் விது பாலா ஆகியோர் நடிப்பில் அதே பெயரில் வெளிவந்தது.
தனது 19 வது வயதில் நாயகியாக தனது முதல் படமான இயக்குநர் ஐ. வி. சசியின் இயக்கத்தில் வெளிவந்த "அவளுட ராவுகள்" என்ற படத்தில் அறிமுகமானார். சீமா மிக அதிகமானப்படங்கள் நடிகர் ஜெயனுடன் நடித்துள்ளார், சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்மூட்டியுடன் 47 பங்களில் நடித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு வரை...
