மாமனிதன் சேட்டிலைட் ரைட்ஸ்-ஐ கைப்பற்றியது பிரபல டிவி நிறுவனம்
மாமனிதன் சேட்டிலைட் ரைட்ஸ்-ஐ பிரபல டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனு ராமசாமி இயக்கத்தில் `தென்மேற்கு பருவக்காற்று' படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஜய் சேதுபதி. அதன் பிறகு பல படங்களில் நடித்த விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, விஷ்ணுவை வைத்து `இடம் பொருள் ஏவல்' படத்தை சீனுராமசாமி இயக்கினார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை. இதையடுத்து நீண்ட நாட்களாக படம் எடுக்காமல் இருந்த சீனுராமசாமி, விஜய்சேதுபதியை வைத்து தர்மதுரை படத்தை எடுத்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதனால் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக மாமனிதன் என்ற படம் மீண்டும் இணைந்துள்ளது.
மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில் தற்போது தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு விறு...
