Tuesday, April 28
Shadow

Tag: திரை

கோமாளி திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
ஜெயம் ரவி படத்திற்கு படம் ஏதாவது ஒரு வித்தியாசத்தை தேடி செய்து வருபவர். அந்த வகையில் இந்த முறை கோமாவில் இருந்து தன் பல வருட வாழ்க்கையை மறந்த ஒரு இளைஞனாக நடித்துள்ளார், இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம் கதை ஆரம்பமே 80களில் தொடங்குகின்றது, 90-ல் ஜெயம் ரவி பள்ளிக்கு செல்வது போல் காட்டுகின்றனர். பள்ளியில் தன்னுடன் படிக்கும் சம்யுக்தாவை ரவி காதலிக்கின்றார். அவரிடம் எப்படியாவது காதலை சொல்ல வேண்டும் என்று டிசம்பர் 31 அன்று செல்ல, அதே நாளில் பெரிய டான் ஒருவரை கொலை செய்து அந்த ஏரியாவில் தான் கிங்காக ஆகவேண்டும் என கே.எஸ்.ரவிக்குமார் திட்டம் தீட்டுகின்றார். ரவி காதலை சொல்ல, அதற்கிடையில் ரவிக்குமார் அந்த டானை கொன்றுவிட்டு ரவி, சம்யுக்தாவிற்கு பரிசாக கொடுத்த ஒரு சிலையை திருட்டிக்கொண்டு செல்கின்றார், அப்போது எதிர்ப்பாராத விதமாக ரவி மீது லாரி மோதி அவர் 16 வருடம் கோமாவிற்கு செல்கின்றார். கோமாவில...

கொலையுதிர் காலம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Review, Top Highlights
சிறு வயது முதல் ஆசிரமத்தில் வளர்ந்த நயன்தாராவால் பேசவும், கேட்கவும் முடியாது. ஆனால், அபாரமாக ஓவியம் வரையக் கூடியவராக நயன் இருக்கிறார். இந்தச் சூழலில், அந்த ஆசிரமத்தின் உரிமையாளரை, அதற்கு முன் ஒருமுறை கூட பார்த்திராத நயன், அச்சு அசலாக வரைந்து வைத்திருக்கிறார். இதனால், லண்டனில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஆசிரம உரிமையாளர், நயன்தாராவை வளர்ப்பு மகளாக தத்தெடுத்து கொள்கிறார். ஆசிரமத்தின் உரிமையாளர் உயிரிழக்கும் நிலையில், லண்டனில் இருக்கும் சொத்துக்களை வளர்ப்பு மகள் நயன்தாராவிற்கு எழுதி வைத்துவிடுகிறார். லண்டனுக்கு செல்லும் நயன்தாராவிடம், ஆசிரம உரிமையாளரின் உறவினர்களான பூமிகா மற்றும் அவரது கணவர், இது எங்களுக்கு சொந்தமான சொத்து என்று முறையிட்டு சொத்தை அபகரிக்க நினைக்கிறார்கள். இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் நயன்தாராவை கொலை செய்ய முயற்சி செய்கிறார். இறுதியில் அந்த மர்ம நபர் யார்? எதற்காக நயன்தார...

ஜாக்பாட் திரை விமர்சனம் ஜாலி ரைடு(ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
ஜோதிகா நடிப்பில் ஜாக்பாட் இன்று திரைக்கு வந்துள்ளது. ஜோதிகா, ரேவதி நடித்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணாலாம். அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரம் பற்றிய அறிமுகத்துடன் தொடங்கும் இந்த கதையில் அதை கண்டெடுக்கும் நபர்கள் அதை வைத்து விரைவில் பணக்காரர்கள் ஆகிவிடுகின்றனர். வண்டிகளை திருடுவது, பொது இடத்தில் ஏமாற்றி பணம் வசூலிப்பது என குறுக்கு வழிகளில் வாழ்ந்து வரும் ஜோதிகா மற்றும் ரேவதி இருவரும் ஒரு முறை அவர்கள் ஜெயிலுக்கு சென்றபோது அங்கு ஒரு பாட்டி தன்னிடம் அக்ஷய பாத்திரம் இருக்கிறது என்றும் அதை ஆனந்த்ராஜின் வீட்டில் குழி தோண்டி புதைத்து வைத்திருப்பதாக சொல்கிறார். அதை தேடி ஜோதிகாவும், ரேவதியும் கிளம்புகிறார்கள். அந்த பாத்திரத்தை ஆனந்த்ராஜை மீறி கைப்பற்றினார்களா என்பதே படத்தின் மீதி கதை. இதுவரை நடந்து வந்த ஜோதிகா முழு ஆக்ஷன் அவதாரத்தில் நடித்துள்ளார். நடிகை ரேவதிக்கு படம் முழுக்க ஜோதிகா...

A1 திரை விமர்சனம் (ரேடிங் 4/5)

Review, Top Highlights
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்ட் நம்பர் 1(A1) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா நடிக்கிறார். இவர் '100% லவ்' என்ற தெலுங்கு படம் மற்றும் பல பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில், ராஜ் நாராயணன் தயாரிக்கும் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.முழுக்க முழுக்க காமெடி படமாக வெளி வந்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லை என்றும் அனைவரும் ஒன்று தான் என்று சமூக கருத்தை மையாக கொண்டு முழுக்க முழுக்க காமடியாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம். தீர்த்தம் கொண்டு வரும் சீனில் படத்தில் இடம் பெற்றுள்ள காம...
கடாரம் கொண்டான் – திரை விமர்சனம் (மிரட்டல்) Rank 4/5

கடாரம் கொண்டான் – திரை விமர்சனம் (மிரட்டல்) Rank 4/5

Review, Top Highlights
நடிகர் விக்ரம் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் குற்றவாளி ஒரவர் காயம் பட்டு ஹாஸ்பிடல் வருகிறான். அங்கு வேலை பார்க்கும் டாக்டரின் மனைவியை கடத்தி அந்த குற்றவாளியை வெளியே அழைத்து வரச் சொல்கிறார்கள். ஒரு பக்கம் அந்த குற்றவாளியை கொல்ல ஒரு கும்பல் சுத்துகிறது. இன்னொரு பக்கம் காவல் துறை துரத்துகிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது. அந்த டாக்டரின் மனைவி காப்பாற்றப்பட்டாரா? அந்த குற்றவாளியும், டாக்டரும் தப்பித்தார்களா? என்பது தான் கதை. 2010ல் வெளிவந்த ஸ்பானிஷ் திரைப்படம் Point blank. இப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுதயாரிப்புகாக வந்திருக்கிறது கடாரம் கொண்டான். கதை, திரைக்கதையில் எந்த பெரிய மாற்றங்களும் இல்லை. அதுவே பெரும் ஆறுதல். Point blank சீட் எட்ஜ் திரில்லர் வகையை சார்ந்தது. அதே போல் தமிழிலும் படத்தின் முதல் காட்சியிலேயே பரபரப்...

தி லைன் கிங் திரை விமர்சனம்

Latest News, Review
டிஸ்னி தயாரிப்பில், ஜான் ஃபேவரூ இயக்கத்தில் வெளி வந்துள்ளதுடன் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பிடித்த படம், `தி லயன் கிங்'. `டிமோன் அண்ட் பும்பா' கார்டூனில் இடம்பெறும் சிங்கத்தை மையமாக வைத்து வெளிவரும் படம்தான் `தி லயன் கிங்'. இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான `தி லயன் கிங்' படத்தின் டிரெய்லர், யூடியூ-பில் இதுவரை 36 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதில் இடம்பெறும் சிம்பா, முஃபாஸா, நலா, ஸ்கார், டிமோன், பும்பா, சாரபி போன்ற சில முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இந்தி வெர்ஷனில் ஷாருக்கானும் அவரின் மகனான ஆர்யன் கானும் டப்பிங் பேசியுள்ளனர். தமிழ் வெர்ஷனில் சித்தார்த், அரவிந்த் சுவாமி, ரோபோ சங்கர், ஐஷ்வர்யா ராஜேஷ் போன்றவர்களும், தெலுங்கில் நானியும் டப்பிங் பேசியுள்ளனர். ஷாகதி, டொனால்ட் க்ளோவர், பாடகி பியான்ஸ் நோல்ஸ், ஆஸ்கர் நாயகி ஆல்ஃபர், செத் ரோகன், பில்லி எய்ச்னர் போன்ற முக்க...
கொரில்லா – திரை விமர்சனம் (ரசனை) Rank 3.5 /5

கொரில்லா – திரை விமர்சனம் (ரசனை) Rank 3.5 /5

Review, Top Highlights
  நடிகர் ஜீவா மற்றும் அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே இணைப்பில் உருவாக்கியுள படமே கொரில்லா. இந்த படத்தின் கதை மற்றும் இயக்கத்தை டான் சாண்டி செய்துள்ளார். இந்த படத்தில் யோகிபாபு, ராதா ரவி, சதீஷ், ராஜேந்திரன் மற்றும் ராமதாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை சாம் சி எஸ் செய்துள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் காதல் கதை, காமடி, அறிவியல் போன்றவற்றை சரியான விகித்தில் கலந்து கொடுக்கப்பட்டுள்ள படமே கொரில்லா. டாக்டராக இருந்து வரும் ஹீரோ (ஜீவா) தலைமையிலான குழுவினர் ஒரு வங்கியை கொள்ளையடிக்கின்றார். ஏன் அவர்கள் வங்கியை கொள்ளையடிகின்றனர் என்பதே படத்தின் முக்கிய கதை ஜீவா-ஷாலினி காதல் காட்சிகள் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு முக்கிய பக்க பலமே காமடிதான். சாம் சி எஸ்-இன் இடை, ஆபத்தான இடங்களை அழகாக படமாகியுள்ள ஆர்.பி குருதேவ்வின் சினிமாட்டோகிராபி வி...
கூர்கா திரை விமர்சனம் (  செம ஜாலி) Rank 3.5/5

கூர்கா திரை விமர்சனம் ( செம ஜாலி) Rank 3.5/5

Review, Top Highlights
தர்மபிரபு படத்தைத் தொடர்ந்து யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்க்கா'. சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். மால் ஒன்றில் கூர்காவாக இருக்கும் யோகி பாபு, அந்த மாலில் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க தூதரை (இந்த கேரக்டரில் கனடா மாடல் எலிசா நடித்துள்ளார்) எப்படி காப்பற்றினார் என்பதே படத்தின் கதை. கூர்க்கா யோகிபாபு, அமெரிக்க தூதரை காப்பாற்று பணியை ஒரு நாயின் உதவியுடன் செய்வார். இந்த நாய் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. ஹீரோ என்பதற்காக யோகிபாபுவை வித்தியாசமான கெட்டப், பந்தாவான பில்டப் என்றெல்லாம் காட்டாமல் மற்ற படங்களில் எப்படி வருகிறாரோ அப்படியே காட்டிய இயக்குநர் நடிப்பில் மட...
களவாணி-2 திரை விமர்சனம் (Rank 3.5/5)

களவாணி-2 திரை விமர்சனம் (Rank 3.5/5)

Review, Top Highlights
விமல்-ஓவியா நடிப்பில் களவாணி படம் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து மெகா ஹிட் அடித்தது. விமல், ஓவியா என்று இருவருக்குமே இந்த படம் பெரிய திருப்பத்தை கொடுத்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது, இதையும் சற்குணம் தான் இயக்கியுள்ளார். இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தது, படம் வருமா? வராதா? என்று பல கேள்விகள் இருந்து வந்தது. ஆனால், தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து இன்னும் சில வாரங்களில் இப்படம் வரவுள்ளது, இந்த நிலையில் தற்போது இப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். முதல் அரைமணி நேரத்தில் ஸ்பைடர் மேன் படம் போன்று மரத்தில் இருந்து காப்பாற்றும் காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தொடர்ந்து படம் செல்ல செல்ல நம்மை படத்துடன் ஒன்ற செய்கிறது. இருந்தாலும் படத்தில் இளவரசன், சரண்யா பொன்வண்ணன் நடிப்பு பாராட்டை பெறுகிறார். விகேன்ஷ் காந்த் நடிப்பு இன்னு...
‘ராட்சசி’ திரை விமர்சனம் (முன் மாதிரி) Rank 4/5

‘ராட்சசி’ திரை விமர்சனம் (முன் மாதிரி) Rank 4/5

Review, Top Highlights
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை ஜோதிகா நடிப்பில் செக்கச்சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்களுக்கு பின்னர் புதுமுக இயக்குனர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ராட்சசி. பல நல்ல சினிமாகள் தமிழ் சினிமாவில் வந்துகொண்டுதான் இருக்கு அனால் எல்லா சினிமாவிலும் நல்ல கருத்துகளை சுமந்து வருபது இல்லை என்று சொன்னால் மிகையாகது இன்றைய கல்வி முறையை பற்றியும் இன்றைய மாணவர்களை பற்றி பல படங்கள் வந்துள்ளது ஆனால் இந்த ராட்சசி முற்றிலும் வித்தியாசமாக வந்துள்ளது. ஆம் இன்று அரசாங்க பள்ளிகளில் நடக்கும் கொடுமைகளை பற்றியும் அனைத்து வசதிகள் இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் இருக்கும் ஆசிரியர்களை பற்றியும் தான் இந்த( பா)டம் அரசுப் பள்ளி ஆசிரியை கீதா ராணி (ஜோதிகா) நடித்துள்ள இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கோகு...