
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்ட் நம்பர் 1(A1) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா நடிக்கிறார். இவர் ‘100% லவ்’ என்ற தெலுங்கு படம் மற்றும் பல பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில், ராஜ் நாராயணன் தயாரிக்கும் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.முழுக்க முழுக்க காமெடி படமாக வெளி வந்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லை என்றும் அனைவரும் ஒன்று தான் என்று சமூக கருத்தை மையாக கொண்டு முழுக்க முழுக்க காமடியாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம். தீர்த்தம் கொண்டு வரும் சீனில் படத்தில் இடம் பெற்றுள்ள காமடி விழுந்து விழுந்து வைக்கிறது.
படத்தின் அறிமுக காட்சியிலேயே ஹீரோ சரவணன் (சந்தானம்), ஹீரோயின் திவ்யா( தாரா அலிஷா) காதலிக்க தொடங்குவதில் இருந்து தொடங்குகிறது.
திவ்யா தனது சொந்தத்திலேயே ஒரு பையனை திருமண செய்து கொள்ளும் கனவுடன் இருந்து வருகிறார். இந்நிலையில் தனது முதல் பார்வையிலேயே சரவணன் தன்னை காதலிப்பதை உணர்கிறார். இந்நிலையில், திவ்யாவின் தந்தை ராமநாதன் ( யாதின் கேரேகர்), அவர்களது சொந்தத்திலேயே ஒருவரை மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இந்நிலையில், சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து திவ்யாவின் தந்தையை எப்படி சரி செய்கிறார்கள் என்பதை படத்தின் மீதி கதை.
படத்தின் பிளஸ்: விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமடி, சந்தானம் மற்றும் அவரது நன்பர்களின் நடிப்பு
படத்தின் மைனஸ்: படத்தின் சில காட்சிகள்
மொத்தத்தில் நண்பர்ளுடன் சேர்ந்து விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமடி படம்.
