Tuesday, April 28
Shadow

Tag: திரை

மை டியர் பூதம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Shooting Spot News & Gallerys
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ராமநாராயணன் டைப் படத்தை தியேட்டரில் பார்த்த உணர்வை தருகிறது மை டியர் பூதம். மஞ்சப்பை, கடம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராகவனின் 3வது படம் தான் இந்த மை டியர் பூதம். குழந்தைகளுக்கான படமாக அவர் இயக்கி உள்ள மை டியர் பூதம் 90களில் குழந்தைகளாக இருந்தவர்களை மகிழ்விக்கும், 2022 கிட்ஸ்களை கவருமா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம். அதே அலாவுதீன் பாணி திரைப்படம் தான் இந்த மை டியர் பூதம். முனிவரிடம் மகன் பெற்ற சாபத்தை அப்பா பூதமான கர்க்கிமுகி (பிரபுதேவா) வாங்கிக் கொண்டு பொம்மையாக மாறி விடுகிறார். அந்த பொம்மையில் இருந்து பூதத்தை விடுவிக்கும் சிறுவன் திருநாவுக்கரசுக்கு (சூப்பர் டீலக்ஸ் புகழ் மாஸ்டர் அஸ்வத்) தேவையான விஷயங்களை செய்யும் பூதமாக மாறுகிறார் பிரபுதேவா. மீண்டும் தனது உலகத்துக்கு சென்று மகனுடன் சேர அந்த சிறுவன் ஒரு விஷயம் செய்ய வேண்டும், அதை திரு...

கார்கி திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5)

Shooting Spot News & Gallerys
சாய் பல்லவி நடிப்பில் சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் வெளியிட்டுள்ள 'கார்கி' படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். ஒன்பது வயது குழந்தையை நான்கு வடமாநில இளைஞர்கள் கற்பழித்து விடுகின்றனர். இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஐந்தாவது நபராக சாய் பல்லவியின் அப்பா ஆர்.எஸ். சிவாஜியும் கைதாகிறார். இதனால் சாய்பல்லவி குடும்பம் பெறும் இன்னல்களுக்கு ஆளாகிறது. சட்ட போராட்டங்களின் மூலம் தனது அப்பாவை மகள் காப்பாற்றினாரா?இறுதியில் அவருக்கு என்ன ஆனது என்பதே கார்கி படத்தின் கதை. கார்கி படத்தில் சாய் பல்லவி பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். எந்தவித பெரிய மேக்கப்பும் இல்லாமல், மிகவும் எளிமையாக படம் முழுக்க நமது பக்கத்து வீட்டு பெண் போலவே காட்சியளிக்கிறார். சாய்பல்லவியின் எதார்த்தமான நடிப்பும், அழுத்தமான திரைக்கதையும் படத்தின் வெற்றிக்கு வலு சேர்க்க...

இரவின் நிழல் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Shooting Spot News & Gallerys
பார்த்திபன் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், பார்த்திபன், வரலக்‌ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள இரவின் நிழல் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். சினிமா ஃபனான்ஸியரான நந்து ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவரை போலீசார் கைது செய்ய துரத்தி வருகின்றனர். போலீசில் சிக்காமல் தன்னை காப்பாற்றிக் கொள்ள போலிச் சாமியார் ரோபோ சங்கரின் உதவியை நாட அங்கே நந்துவுக்கு என்ன மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது. ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ஒரு சிறுவன் சொந்தக் காலில் நிற்க எத்தனை பாவங்களை செய்ய வேண்டி இருக்கு, தான் செய்த குற்றங்களையும் தனது வாழ்க்கையும் இதே சிங்கிள் ஷாட் படத்தில் நிகழ்காலம், கடந்த காலம் என மாற்றி மாற்றி பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக் காட்சிகளை எல்லாம் எந்தவொரு கட்டும் இல்லாமல் வைத்து அதனை பார்வையாளருக்கு கடத்தி இருக்கும் விதம் நந்துவின் வாழ்க்கையில் வரும் பெண்கள், அவனுக்கு ...

பன்னி குட்டி திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Shooting Spot News & Gallerys
பன்னி குட்டி பற்றிய மூடநம்பிக்கையை கதையின் மையமாக வைத்துள்ளார்… ஆரம்ப கதைக்களம் கருணாகரனிடமிருந்து ஆரம்பிக்கிறது. ஒரு வெள்ளைப்பன்னியால் கருணாகரனுக்கு முன்பே பிரச்னை ஏற்பட்டுள்ளது… அந்த பன்னி குட்டியோ யோகிபாபுவியிடம் உள்ளது ஒரு கட்டத்தில் அந்த பன்னி குட்டி தொலைந்து விடுகிறது யோகி பாபு மற்றும் கருணாகரன் அந்த பன்னிகுட்டியை தீவிரமாக தேடுகிறார்கள் இவர்கள் பன்னியை தேடும் சில இடங்களில் காமெடி நன்றாகவே இருக்கிறது யோகி பாபுவும் கருணாகரனும் பன்னிக்குட்டியைத் எதற்காக தேடுகிறார்கள்? பன்னிக்குட்டியைப் பிடிப்பார்களா? பன்னிக்குட்டி யாருக்கு சொந்தம்? கதையின் பின்னணி என்ன? என்பதே மீதமுள்ள கதைக்களம். இந்த கதையின் நாயகன் அந்த பன்னி குட்டி தான் படத்தின் பிளஸ் படத்தில் சிறப்பானவை திரைக்கதை, சதீஷ் முருகனின் ஒளிப்பதிவு, கிருஷ்ண குமார் [K] இசை படத்தின் மைன்ஸ் மெல்ல நகரும் கதைக்களம் மொத்தத்தில் பன்னி கு...
மாமனிதன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

மாமனிதன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review, Top Highlights
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மாமனிதன் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். மனசாட்சிக்கு பயந்து ஒரு மனிதனாக வாழ முயற்சிக்கும் ஒவ்வொரு மனிதனும் மாமனிதன் தான் என்கிற ஒன் லைனை அழகாக படமாகவும் பாடமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. "அப்பன் தோத்த ஊர்ல.. புள்ளைங்க ஜெயிக்கிறது கஷ்டம்" என்கிற ஆழமான அழுத்தமான வசனத்தை விஜய்சேதுபதி சொல்லும் இடத்தில் தான் படத்தின் கதையே புரிகிறது. அப்படியொரு சூழலில் தனது பிள்ளையை ஜெயிக்க வைக்க தலை நிமிர்ந்து வாழ வைக்க தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி செய்யும் வேலைகள் தான் படத்தின் மையக் கரு. அதிகம் படிக்காத விஜய்சேதுபதி அந்த ஊரிலேயே முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநராக ஆகிறார். ஊரில் நல்ல மனிதன் என்கிற பெயரை எடுக்கும் விஜய்சேதுபதிக்கு தீராத களங்கம் ஒன்று ஏற்பட அதி...

மாயோன் திரை விமரசனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review, Shooting Spot News & Gallerys, Top Highlights
இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ், தான்யா ரவிசந்திரன் நடிப்பில் வெளியாகியுள்ள மாயோன் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். மாயோன் மலை என்ற பகுதியில் உள்ள பழங்கால கிருஷ்ணர் கோயிலை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆய்வு செய்கிறது. அந்த ஆய்வுக்கு தொல்லியல் துறை அதிகாரியான கேஎஸ் ரவிக்குமார் தலைமை வகிக்கிறார். ஆனால், அவரது கீழ் வேலை பார்க்கும் ஹரிஷ் பெரடி, சிபிராஜ் இருவரும் சேர்ந்து அந்தக் கோயிலில் இருக்கும் ரகசிய அறையில் உள்ள புதையலை எடுத்து வெளிநாட்டிற்குக் கடத்த நினைக்கிறார்கள். அந்த புதையல் அறை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள். திட்டமிட்டபடி அவர்களால் அதைச் செய்ய முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. தொல்லியல் துறையில் ஆராய்ச்சியாளராக சிபிராஜ். எந்த ஒரு பழங்காலப் பொர...

விக்ரம் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.75/5)

Latest News, Review
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். காவல் துறையில் இருப்பவர்களை மாஸ்க் அணிந்த மர்ம கும்பல் கொலை செய்கிறது. இதில் காளிதாஸ் ஜெயராமும் கொல்லப்படுகிறார். அதுபோல் காவல் துறையில் சம்பந்தம் இல்லாமல் இருக்கும், காளிதாசனின் வளர்ப்பு அப்பா கமலும் கொல்லப்படுகிறார். மாஸ்க் மனிதர்களை கண்டுபிடிக்க, சீக்ரெட் ஏஜென்சிஸ் ஆக இருக்கும் பகத் பாசிலிடம் ஒப்படைக்கப்படுகிறது. மாஸ்க் மனிதர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பகத் பாசிலுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் பகத் பாசில், மாஸ்க் மனிதர்களை கண்டுபிடித்தாரா? கமலை மாஸ்க் மனிதர்கள் கொலை செய்ய காரணம் என்ன? மாஸ்க் மனிதர்கள் காவல் துறையினரை கொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கமல், முதல் பாதியில் கர்ணனாகவும்,...

வாய்தா திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Shooting Spot News & Gallerys
வராஹா சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில் படத்தை இயக்கியிருக்கிறார் மகிவர்மன்.சி.எஸ். இதில் நாசர், மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர்சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-லோகேஸ்வரன், ஒளிப்பதிவு-சேதுமுருகவேல் அங்காரகன், படத்தொகுப்பு-நரேஷ் குணசீலன், கலை-ஜாக்கி, பாடல்கள்- இயக்குநர் ராஜு முருகன், உமா தேவி, மணி அமுதன், நவகவி, மகிவர்மன், சண்டை-சுப்ரீம் சுந்தர், உடைகள்-சீனு, தயாரிப்பு மேலாளர்-செல்வா, மக்கள் தொடர்பு-யுவராஜ். ஜாதி வேறுபாட்டில் மூழ்கி கிடக்கும் கிராமத்தில் வெவ்வேறு திசையில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொள்ளாமல் திரும்ப தடுமாறி தெரு ஒரத்தில் கடை நடத்தும் வயதான சலவைத் தொழிலாளி மீது எதிர்பாராத விதம...

ஐங்கரன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகியுள்ள ஐங்கரன் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். 2015ல் வெளிவந்த 'ஈட்டி' என்ற விளையாட்டை மையப்படுத்திய விறுவிறுப்பான ஆக்ஷன் படத்தை தனது முதல் படமாகக் கொடுத்து யார் இவர் எனக் கேட்க வைத்தவர் இயக்குனர் ரவி அரசு. அது போலவே அவருடைய இரண்டாவது படத்திலும் வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களுடன் கொடுத்து இந்தப் படத்தையும் பேச வைக்கிறார். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்தவர் ஜிவி பிரகாஷ்குமார். நாமக்கல்லில் வசிக்கும் பிரகாஷுக்கு புதுப்புது கண்டுபிடிப்புகளைச் செய்வது வழக்கம். அப்படி பல தயாரிப்புகளை கண்டுபிடித்து அவற்றிற்கு உரிமம் பெற நடையாய் நடக்கிறார். ஆனால், அவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதனிடையே, அவர்களது ஊரில் ஆழ்துளை குழாயில் விழுந்த ஒரு குழந்தையின் உயிரை தன்னுடைய கண்டுபிடிப்பால் காப்பாற்று...

விசித்திரன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Latest News, Review
ஆர்.கே சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள விசித்திரன் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். படத்தின் மைய கதை பொள்ளாச்சி மாவட்டம் வால்பாறையில் நடைபெறுமாறு உருவாக்கியுள்ளார் இயக்குனர் பத்மக்குமார். நடிகர் ஆர்.கே. சுரேஷ் படத்தில் போலிஸ் அதிகாரியாக இருந்து பணி ஓய்வுக்கு தாமக முன்வந்து வீட்டில் தனியாக வசித்து வருவார். நடிகர் சுரேஷ் மனைவியாக மலையாள நடிகை ஷாம்னா காசிம் நடித்துள்ளார். சுரேஷின் முன்னாள் காதலி திடீர் மரணம் அடைய அதை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இருக்கும் ஹீரோ தனது மணைவியிடம் சற்று விலகி இருக்க நினைக்கிறார். இதனால் அவரது மனைவியோ அவரை விவாகரத்து செய்து விட, சுரேஷ் தனது மகள் உடன் இருப்பார். மகள் விபத்தில் இறந்து விட விரக்கித்தில் இருக்கும் சுரேஷ் திடீரென்று தனது முன்னாள் மனைவிக்கு மூலைச்சாவு ஏற்பட்டாதாக மருத்துவமனை நிர்வாகம் சொல்ல, உடல் உறுப்புகளை தானம் செய்து விடுகின்றனர். இதை சுரேஷ் வி...